மிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால்

Recommended Video

Prabhas Exclusive Interview | Saaho Special

சென்னை: நடிகர் பிரபாஸ் தேர்வு செய்யும் திரைப்படங்களை நேசிக்கிறேன். கடந்த காலத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவம் இன்று நினைத்தாலும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தெலுங்கு சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நம் திரையுலகில் பல நடிகைகள் அறிமுகமாகிறார்கள் அதில் ஒரு சிலருக்கு தான் கட்டுகடங்கா ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வரிசையில் முன்னணியில் ஒருவராக இருப்பது காஜல் அகர்வால். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என கலக்கி வரும் காஜல் அகர்வாலுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம். ஆரம்ப காலத்தில் தமிழில் அவர் நடித்த சில படங்கள் மூலம் பெரிய அளவில் பேச படவில்லை என்றாலும் 2010ல் வெளியான "நான் மகான் அல்ல" திரைப்படம் மூலம் அவரது திரை பயணம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

I love the movies that actor Prabhas chooses-Kajal Aggarwal

அதை தொடர்ந்து மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் போன்ற பல ஹிட்
படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது, நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கும் மும்பை சாகா என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். மும்பை சாகா திரைப்படத்தை தவிர, நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு, பாலிவுட் திரைப்படமான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கிலும், நடிகர் மஞ்சு விஷ்ணுவுடன் ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். டார்லிங், மிஸ்டர் பெர்பெக்ட் ஆகிய இரு படங்களில் காஜல் அகர்வால் தெலுங்கு ஸ்டார் பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ளனர்.

I love the movies that actor Prabhas chooses-Kajal Aggarwal

காஜல் அகர்வால் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை தந்தது. இத்திரைப்படத்தில் நடித்து முடித்த பின்பு கிடைத்த கேப்பில் குடும்பத்துடன் டூர் கிளம்பி விட்டார்.

சமீபத்தில் குடும்பத்துடன் ஆக்ரா சென்ற காஜல் அகர்வால், அங்கு தாஜ்மஹாலின் அழகில் சொக்கிப்போய், அங்கு விதம் விதமான போஸ்களில் போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினார். காஜலின் போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் அவைர ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்வது வழக்கம். அந்த பதிவுகளுக்கெல்லாம் ரசிகர்கள் பதில் அளித்து வந்தனர். இந்நிலையில் காஜல் அகர்வால் ஒரு புதிய அதிரடி அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது என்னவென்றால் தனது ரசிகர்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க போவதாக அறிவித்திருந்தார்.

#ASKKajal எனும் ஹாஷ்டேக் எனும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது கேள்விகளை பதியலாம் அதற்கு நான் பதிலளிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் பலதரப்பட்ட கேள்விகளை முன்வைத்தனர். இதனால் அவரின் ஹாஷ்டேக் மிகவும் பிரபலமானது. காஜல் கூறியது போல் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.

நேற்று காஜல் அகர்வால் தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் உரையாடினார். ரசிகர்களுடனான உரையாடலின் போது, காஜல் அகர்வால் பிரபாஸைப் பற்றியும் பேசினார். ரசிகர்களில் ஒருவர் காஜல் அகர்வாலிடம், எங்கள் டார்லிங் பிரபாஸைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள், என்று கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்து, அவர் தேர்வு செய்யும் திரைப்படங்களை நேசிக்கிறேன். கடந்த காலத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவம் இன்று நினைத்தாலும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தெலுங்கு சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று சந்தோசம் பொங்க கூறினார்.

மறுபுறம், சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் காஜல் அகர்வால் பிரபாஸின் ஆளுமையை அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்கிறார் என்று சிலாகித்து குறிப்பிட்டிருந்தார்.

உங்களுக்கு பிடித்த உணவு, நடிகர், நடிகை யார் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். ஒரு ரசிகர் உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா? என்று நகைச்சுவையுடன் கேட்ட கேள்விக்கு மிகவும் கூலாக என் டூத் பேஸ்டுல உப்பு மட்டும் அல்ல வேறு பல முக்கிய பொருட்களும் அடங்கியுள்ளது. நான் எனது பல் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்று பதில் அளித்து வருகிறார். இப்படி பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளார் காஜல் அகர்வால். இதன் மூலம் ரசிகர் படு குஷியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X