"என்னை காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க"... ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின் ஓபன் டாக்!
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் தான் நடிக்கும் படத்தில் தான் நகைச்சுவை செய்துள்ளதாக நடிகை நிகிஷா படேல் தெரிவித்துள்ளார்.
சென்னை: எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் தான் நடிக்கும் படத்தின் நகைச்சுவை ஆன்மாவே தான் தான் என நடிகை நிகிஷா படேல் தெரிவித்துள்ளார்.
அரவிந்தசாமி அமலா பால் நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர் நிகிஷா படேல். தற்போது இவர் இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.
இந்தப்படம் பற்றி பேசிய அவர், படத்தில் தான் நகைச்சுவை செய்துள்ளதாகக் கூறினார்.

நகைச்சுவை ஆன்மா
இதுகுறித்து அவர் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம்.

யோகா காட்சி
முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனிநபராகவும் திரைநட்சத்திரமாகவும் நேசிக்கத்தக்க நபர். அவருடைய காமெடி டைமிங் எல்லாம் ஜோர்.

எழில் படங்கள்
எழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ கதைகள் பற்றி ஆலோசித்திருந்தாலும் இந்த கேரக்டர் எனக்குப் பொருந்திப் போயிற்று.

மீண்டும் நடிக்க ஆசை
எழில் சார் மிகவும் அமைதியான நபர். கடினமாக உழைக்கும் இயக்குநரும் கூட. இந்த கதை மீது எழில் சார் சிறப்பான பார்வை கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றார் நிகிஷா படேல்


Click it and Unblock the Notifications











