டர்ட்டி பிக்சரில் நடிக்கிறேன்.. ஆனா நான் டர்ட்டி பொண்ணு இல்ல!- சனா கான் பளிச் பேட்டி!

By Shankar

Sana Khan
நடிகை சனா கான்... போன மாதம் ஒரு நாள் திடீரென்று மீடியாவில் பரபரத்த பெயர். பெங்களூர் விபச்சார ரெய்டில் பிரபல சிலம்பாட்டம் பட புகழ் நடிகை சனா கான் கைது என்று செய்தி வெளியாக (ஒன்இந்தியா அல்ல), சினிமா உலகம் பதறியடித்துக் கொண்டு விசாரித்தது.

ஆனால் சிக்கியது இந்த சனா கான் அல்ல, அவர் மும்பையைச் சேர்ந்த துணை நடிகை என்பது தெளிவானது. இந்த விஷயத்தை அடுத்த நாளே பெங்களூர் சிந்தாபுரி சப் இன்ஸ்பெக்டர் ரவிஷங்கர் புகைப்பட ஆதாரத்தோடு வெளியிட்டார்.

தன் படத்தைப் போட்டு இந்த செய்தியை வெளியிட்ட மீடியாக்களுக்கெல்லாம் சனாகான் வக்கீல் நோட்டீசும் விட்டார்.

ஆனாலும் தன்னைப் பற்றிய தப்பான எண்ணம் இன்னும் இருக்குமோ என்ற சந்தேகத்தில், சென்னையில் வந்து நிருபர்களைச் சந்தித்து இன்று விளக்கமும் அளித்தார்.

அவர் கூறுகையில், "சனா கான் விபச்சார வழக்கில் கைது என்ற செய்தி வெளியான போது, நான் மும்பையில் எனது வீட்டை வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியாது. கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்த போன்கால்கள். என் தோழிகள், மேனேஜர் எல்லாம் விஷயத்தைச் சொன்னார்கள்.

அன்று நான் பட்ட வலி, அவமானம் கொஞ்சமல்ல. செய்யாத தவறுக்கு தண்டனையா என மனதில் அழுதேன். அடுத்த நாளே, பெங்களூர் போலீசார் கைதான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டாலும், மீடியா அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த செய்தி வெளியான அடுத்த நாளே நான் தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்றேன். அன்றைக்கு அங்கிருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை... 'இவள் அப்படித்தான் இருப்பாளோ.. பணம் இருப்பதால் தப்பி வந்துவிட்டாளோ' என்பதைப் போலிருந்தது.

இந்த சோதனையான கட்டத்திலிருந்து வெளியில் வந்துவிட்டேன்," என்றார்.

சனா கான் இப்போது மலையாளத்தில் தயாராகும் தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வந்த படத்தின் தழுவல் அல்ல... மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய ஆன்டனி ஈஸ்ட்மேன் எடுக்கும் ஒரிஜினல் கதையாம். சில்க் பற்றி தனக்குத் தெரிந்த உண்மைகளை இதில் காட்சிப்படுத்துகிறாராம் ஆன்டனி.

இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடிக்கிறார் சனா கான். இதுகுறித்து அவர் அடித்த கமெண்ட்: நான் டர்ட்டி பிக்சரில் நடிக்கிறேன்... ஆனா நிஜத்தில் ட்ர்ட்டி பொண்ணு இல்லே... ரொம்ப க்ளீன்!

அப்புறம்... சனா கான் நல்லா தமிழ் பேசறார்னு நிறைய கதைகளை மீடியாவில் அடித்துவிட்டிருந்தார்கள். அந்தப் பொண்ணுக்கோ தமிழில் பேச சுட்டுப்போட்டாலும் வரவில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X