வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு: அதிகாரப்பூர்வமாக அறிவித்த நஸ்ரியா
திருவனந்தபுரம்: நஸ்ரியா மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நேரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நஸ்ரியாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ராஜா ராணி படத்தில் அவர் ஆர்யாவின் காதலியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
வந்த வேகத்தில் பிரபலமான அவர் அதே வேகத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.

திருமணம்
மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. எப்பொழுது மீண்டும் நடிக்க வருவீர்கள் என்று ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
அறிவிப்பு
உங்களின் அடுத்த படம் எப்பொழுது? என்று பெங்களூர் டேஸ் நாட்களில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு இதோ பதில்...மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். அஞ்சலி மேனன் படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி மற்றும் நான் என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் நஸ்ரியா.

துல்கர்
துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் ஒன்று மலையாளம் மற்றும் தமிழில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறாராம்.

மகிழ்ச்சி
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்த செய்தி அறிந்து மலையாள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்படியே தெலுங்கு படங்களிலும் நடிக்குமாறு தெலுங்கு ரசிகர்கள் நஸ்ரியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











