நா திரும்ப நடிக்க வந்துட்டேன்....: உற்சாகத் துள்ளலோடு ‘ரட்சகன்’ நாயகி சுஷ்மிதாசென்
மும்பை: முன்பை விட அழகாகவும், மிகவும் இளமையாகவும் தோன்றுகிறார் சுஷ்மிதாசென். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா மீண்டும் தனது திரைஉலக சேவையைத் தொடர்வதற்காக களத்தில் இறங்கி விட்டாராம்.
ரட்சகனில் 'சோனியா, சோனியா' எனப் பாடி ரசிகர்களை சொக்க வைத்த சுஷ்மிதா சென் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. தனது இரண்டு தத்துப்பிள்ளைகளைக் கவகிப்பதிலேயே தன் பொன்னான பொழுதைக் கழித்தார்.
தற்போது 37 வயதாகும் சுஷ்மிதா, நான் மீண்டும் நிச்சயமாக சினிமாவில் நடிப்பேன்' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நோ பிராப்ளம்...
வெள்ளித்திரையில் சுஷ்மிதாவை ரசிகர்கள் கடைசியாக ரசித்தது ‘நோ பிராப்ளம்' படத்தில் தான். இப்படம் 2010ம் ஆண்டு வெளி வந்தது.

பிஸி அம்மா...
அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வளர்ப்பு மகள்களைக் கவனிப்பதில் ரொம்பவே பிஸியாகிப் போனார் சுஷ்மிதா. அதற்காக கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் புறக்கணித்தார்.

தத்துப்பிள்ளைகள்....
சுஷ்மிதாவிற்கு இரண்டு தத்துப் பிள்ளைகள உண்டு. இரண்டுமே பெண் குழந்தைகள். முதல் குழந்தையின் பெயர் ரினீ. இவர் கடந்த 2000ம் ஆண்டு தத்தெடுக்கப் பட்டார்.

சினிமாவிற்கு பை...பை
இரண்டாவது பெண் குழந்தையின் பெயர் ஆலிசா. இவரை கடந்த 2010ம் ஆணு தத்தெடுத்தார் சுஷ். இவரைக் கவனித்துக் கொள்வதற்காகத் தான் சினிமாவிற்கு ‘பை பை' சொன்னார்.

திரும்ப ஹீரோயினா..?
மூன்றாண்டு இடைவெளிக்குப்பிறகு மீண்டும்ம் அரிதாரம் பூச தயாராகி விட்டார் சுஷ்மிதா. என்னப்படம், எத்தகைய வேடம் என்பதைப் பற்றி மட்டும் சஸ்பென்ச் வைக்கிறார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
மேற்கொண்டு எதையும் தெளிவாக தெரிவிக்காத சுஷ்மிதா, ‘தயாரிப்பாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவே நான் மௌனம் காக்கிறேன். எனது இளைய மகள் ஆலிசாவைக் கவனித்துக் கொள்வதற்காகவே மூன்று ஆண்டுகாலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தேன்.

நா ரெடி... நீங்க ரெடியா..?
இப்போது அவளுக்கு மூன்று வயதாகி விட்டது. அதனால் நான் மீண்டும் நடிப்பைத் தொடரலாம் என முடிவெடுத்து விட்டேன். ஆம், நான் நடிக்க ரெடியாயிட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











