இளைய தளபதி விஜய்யும், கங்காருவையும் மிஸ் பண்ணும் அமலா பால்
சென்னை: தலைவா பட ஷூட்டிங் முடிந்து அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் இளைய தளபதியை மிஸ் பண்ணப் போவதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.
தலைவா பட ஷூட்டிங் மும்பையில் தொடங்கி ஆஸ்திரேலியாவில் முடிந்துள்ளது. ஷூட்டிங் முடிந்து அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விஜய் அடுத்த படமான ஜில்லாவுக்கு ரெடியாகி வருகிறார்.
இந்நிலையில் தலைவாவில் விஜய் ஜோடியாக நடித்த அனுபவம் சிறப்பானது என்று அமலா பால் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துள்ளதால் இளைய தளபதியையும், படக்குழுவினரையும் மிஸ் பண்ணப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்துக்குள்ள முடிந்துவிட்டது
நேற்று தான் தலைவா ஷூட்டிங் துவங்கியது போன்று உள்ளது ஆனால் அதற்குள் முடிந்துவிட்டது என்று மைனா ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளார்.

முக்கியமான கதாபாத்திரம்
தலைவாவில் அமலா மரத்தைச் சுற்றி விஜய்யுடன் டான்ஸ் ஆடிவிட்டு போக மாட்டாராம். மாறாக அவர் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாம்.

கங்காருவை மிஸ் பண்ணுவேன்
அமலா விஜய்யை மட்டுமல்ல கங்காரு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களையும் மிஸ் பண்ணுகிறாராம்.


Click it and Unblock the Notifications











