குடியுரிமை சட்டத் திருத்தம்.. நச்சென ஒரே ஒரு போட்டோ போட்ட அமலாபால்.. பாராட்டும் நெட்டிசன்கள்!
தான் ஒரு இந்தியன் என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக நடிகை அமலா பால் நச் என ஒரு பதிவு போட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜாலியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் இந்த போராட்டம் மேலும் பரவியுள்ளது.

அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவில் ஒரு பெண் கையில் ஒரு பதாகையை வைத்திருக்கிறார். அதில் தான் ஒரு இந்தியன் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தியன் என்ற அந்த வார்த்தைக்குள், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், ஜெயினவர், புத்திஸ்ட் , சீக்கியர்கள் அனைவரும் அடக்கம் என அழகாக உணர்த்தப்பட்டுள்ளது.
அமலா பாலின் இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பல முன்னணி நடிகர்கள் வாய் திறக்காத நிலையில், அமலா பாலின் இந்த துணிச்சலான பதிவை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











