நான் அம்மா போன்று ஸ்டிராங், அப்பா போன்று நாத்திகவாதி: அக்ஷரா ஹாஸன்

By Siva

மும்பை: தான் அம்மா போன்று உறுதியானவள் என்றும், அப்பா போன்று நாத்திகவாதி என்றும் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஷமிதாப் இந்தி படம் மூலம் நடிகையாகியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் நடிப்பு, அக்கா ஸ்ருதி, பெற்றோர் பற்றி அக்ஷரா ஹாஸன் கூறுகையில்,

அம்மா

அம்மா

இந்த உலகில் எனக்கு என்னை தான் மிகவும் பிடிக்கும். அடுத்ததாக என் அம்மா சரிகா. என் வாழ்வின் இளவரசி, ராணி அவர். என் அம்மா உறுதியானவர். நானும் அவரைப் போன்றவள். அவருக்கு என்னுடைய சோம்பேறித்தனம் பிடிக்காது.

அப்பா கமல்

அப்பா கமல்

நான் என் அம்மா, அப்பாவின் கலவை. அவர்களிடம் இருந்து தான் எனக்கு குறும்புத்தனம் வந்துள்ளது. இந்த வயதிலும் என் அப்பா 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்றே வேலை செய்கிறார். அது எனக்கு பிடிக்கும். அவர் கடின உழைப்பாளி. அவரைப் போன்றே நானும் நாத்திகவாதி. கோவிலுக்கு செல்வேன் ஆனால் நம்பிக்கை இல்லை. மவுண்ட் மேரி தேவாலயத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு அங்கு மணிக்கணக்கில் அமர்ந்து வந்து செல்வோரை பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஸ்ருதி

ஸ்ருதி

நான் சரியான சேட்டைக்காரி. சேட்டை செய்துவிட்டு அம்மாவிடம் சிக்கினால் அக்கா ஸ்ருதியை மாட்டிவிடுவேன். ஸ்ருதி என்னை விட உறுதியானவர். அவரும், நானும் மிகவும் நெருக்கமானவர்கள். அவர் என்னை எப்பொழுதும் பாதுகாப்பவர்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் மிகவும் அமைதியானவர். கேமராவுக்கு முன் வந்துவிட்டால் வேறு நபராகிவிடுவார். அவர் நடிப்பதை பார்த்தாலே அசந்துவிடுவோம்.

தமிழ் சினிமா

தமிழ் சினிமா

தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் என்ற திட்டம் உள்ளது. ஆனால் தற்போதைக்கு கிடையாது. பாலிவுட்டில் நடிக்கத் துவங்கியுள்ளதால், நான் முதலில் இங்கு ஒரு இடத்தை பெற வேண்டும் என்றார் அக்ஷரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X