நம்புங்க, நான் ஆறடி உயரம் எல்லாம் இல்லீங்கோ: அனுஷ்கா

By Siva

சென்னை: அனுஷ்கா தான் ஒன்றும் ஆறடி உயரம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவை பற்றி யாராவது பேசினாலே ஆறடி உயர அரேபியக் குதிரை போன்று இருக்கிறார் என்று தான் கூறுவார்கள். அவர் உயரத்திற்கு ஈடு கொடுக்க சில ஹீரோக்களால் முடியாமல் உள்ளது.

இந்நிலையில் அனுஷ்கா தனது உயரம் பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர்கள் தயக்கம்

இயக்குனர்கள் தயக்கம்

அனுஷ்கா வஞ்சனையில்லாமல் வளர்ந்துள்ளதால் தான் இயக்குனர்கள் அவரை அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்க வைக்க முடியாமல் தயங்குகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

சிங்கம்

சிங்கம்

சிங்கம் படத்தில் சூர்யா அனுஷ்காவின் உயரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி இருப்பார். அதனால் பாடல் காட்சிகளில் எல்லாம் எச்சரிக்கையாக சற்று இடைவெளி விட்டே ஆடியிருப்பார்.

மாப்பிள்ளை எப்படி?

மாப்பிள்ளை எப்படி?

அனுஷ்கா இவ்வளவு உயரமாக இருக்கிறாரே. அவருக்கு வரும் மாப்பிள்ளை ஒன்று அவரது உயரத்திற்கு சமமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அவரை விட உயரமாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு உயரமான மாப்பிள்ளை எப்படி கிடைக்கும் என்று அனுஷ்காவின் தோழிகளே கேள்வி எழுப்பினர்.

நான் ஆறடி இல்லீங்க

நான் ஆறடி இல்லீங்க

தான் ஆறடி உயரம் இல்லை என்றும், 5.6 தான் என்றும் அனுஷ்கா தெரிவித்துள்ளார். மேலும் தான் படங்களை ஹீரோ உயரமாக அல்லது குள்ளமாக இருக்கிறாரா என்று பார்த்து தேர்வு செய்வது இல்லை. மாறாக கதை மற்றும் தனது கதாபாத்திரத்தை பொருத்தே தேர்வு செய்வதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X