முன்னணி நடிகையாவதற்கு அவசரப்படவில்லை: மோனிகா
நடிகை மோனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகியாகியாக நடித்து வருபவர். நிறையப் படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் முன்னுக்கு வராமல் இருக்கிறார். இத்தனை காலமாக நடிக்கிறீர்கள், ஏன் இன்னும் முன்னணி நடிகையாகாமல் இருக்கிறீர்கள். எதற்காக இந்தத் தாமதம் என்று கேட்டால் நிதானமாக பதிலளிக்கிறார் மோனிகா.
சினிமாவில் எனக்கு பிறகு நடிக்க வந்தவர்கள் எல்லாம் நல்ல இடத்தில் உள்ளனர். நானும் ஒரு நாள் முன்னணி நடிகையாவேன். தற்போது தமிழில் சின்னதாக ஒரு கேப் விழுந்து போச்சு. நான் கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்து நடிப்பது தான் அதற்கு காரணம். நான் நடித்த அகராதி படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
இதையடுத்து கூத்துக்காரப் பசங்க மற்றும் கன்னிகாபுரம் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இரண்டு படங்களிலுமே எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications












