த்ரிஷா கையில் பெரிய வைர மோதிரம்: ஆனால் நிச்சயம் நடக்கவில்லையாம்

By Siva

சென்னை: த்ரிஷா கையில் பெரிய வைரக்கல் மோதிரம் அணிந்திருப்பதை பார்த்து அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் அவரோ அதை மறுத்துள்ளார்.

த்ரிஷாவுக்கு திருமணமாம் அவங்க அம்மா உமா மாப்பிள்ளை தேடுகிறாராம் என்ற செய்தி அவ்வப்போது வருவதும் போவதுமாக உள்ளது. இதற்கிடையே த்ரிஷா, ராணா காதல் மற்றும் காதல் முறிவு செய்திகளும் வெளியாகும். தற்போது த்ரிஷாவும், ராணாவும் பிரிந்துவிட்டார்களாம்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. த்ரிஷா கையில் பெரிய வைரக்கல் மோதிரத்தை அணிந்திருப்பதை பார்த்தவர்கள் அது நிச்சயதார்த்த மோதிரம் என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்.

த்ரிஷா

த்ரிஷா

என்ன த்ரிஷா உங்களை பற்றி இப்படி ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறதே என முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று அவரிடம் கேட்க அவரோ, இது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

வருண்

வருண்

த்ரிஷாவும், வருணும் காதலிப்பதாகவும் விரைவில் அவர்களின் குடும்பத்தார் சந்தித்து இந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புவதாகவும் நடிகைக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

ட்வீட்

ஓலா மக்களே... எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!!! அப்படி நடந்தால் அது பற்றி என்னிடம் இருந்து தான் முதலில் உங்களுக்கு தகவல் வரும் என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடந்திருக்கலாம்

நடந்திருக்கலாம்

த்ரிஷாவுக்கு நிச்சயம் நடந்திருக்கலாம் அவர் படங்களை முடித்துவிட்டு கூறலாம் என்று மறைக்கலாம் என்கிறது ஒரு கூட்டம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X