என்னது தொழிலதிபரோட திருமணமா? இந்த கொரோனா நேரத்துல ஏன் இப்படி வதந்தி? பிரபல ஹீரோயின் காட்டம்!

By

சென்னை: தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார்.

Recommended Video

Keerthy Suresh Reveals her quarantine Partner | Lock Down

தமிழில், இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

முன்னணி நடிகையாக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அண்ணாத்த

அண்ணாத்த

முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. இந்தியில் மைதான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது.

மிஸ் இந்தியா

மிஸ் இந்தியா

இதில், அஜய் தேவகன், மனைவியாக, அவர் நடிப்பதாகக் இருந்தது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், திடீரென விலகினார். இதற்கு அவர் உடல் எடையை குறைத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் மிஸ் இந்தியா, குட்லக் சகி, ரங் தே ஆகிய படங்களிலும் தமிழில் பென்குவின் படத்திலும் நடித்து வருகிறார்.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ, பிரபாஸ் ஜோடியாகவும் அவர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரசுராம் இயக்கும் இந்தப் படத்தின் கதையை போனில் கேட்டு அவர் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, விரைவில் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும் படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பெற்றோர்களின் முடிவுக்கு ஓகே சொல்லி விட்டதாகவும் மணமகன், கேரளாவின் பிரபல தொழிலதிபரும், அரசியல் செல்வாக்கும் கொண்ட மல்டி மில்லியனர் ஒருவர் என்றும் செய்திகள் வெளியானது.

அந்த திட்டம் இல்லை

அந்த திட்டம் இல்லை

இந்நிலையில் இதை நடிகை கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார். 'இந்த செய்தி எனக்கு ஆச்சரியத்தை தந்தது. எங்கிருந்து, எப்படி இந்த அபத்தமான வதந்தி கிளம்பியது என்று தெரியவில்லை. இப்போது திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எனக்கு இல்லை. இதை உறுதியாகத் தெளிவுபடுத்துகிறேன். நாடு இப்போது, இதை விட முக்கியமான விஷயத்தை எதிர்கொண்டிருக்கிறது.

பாதுகாப்பாக

பாதுகாப்பாக

இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை விட, கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் மக்களுக்கு நான் சொல்ல நினைப்பது, பாதுகாப்பாக இருங்கள், சமூக விலகலை கடைபிடியுங்கள், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார், நடிகை கீர்த்தி சுரேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X