“விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை”.. பிரபல நடிகையின் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்!
விஜய், அட்லி படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தளபதி 63ல் தான் நாயகியாக நடிக்கவில்லை என நடிகை ராஷ்மிகா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய். அட்லியின் இயக்கத்தில் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பது ஏற்கனவே படக்குழுவால் உறுதி செய்யப்பட்டு விட்டது. இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அது தெலுங்கு நடிகை ராஷ்மிகா தான் என சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வைரலானது.
ஆனால், அது உண்மையில்லை டிவிட்டர் பக்கம் வாயிலாக நடிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகாவின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தம் அடைந்துள்ளனர். விஜய் படம் மூலமாக அவர் தமிழில் அறிமுகமாவார் என ஆசையாக இருந்தனர். ஆனால், அது பொய் என ஆகிவிட்டதால், விரைவில் அவர் தமிழில், அதுவும் விஜய் ஜோடியாக அறிமுகமாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
ராஷ்மிகா தெலுங்கில் வெற்றிப்படமான கீதாகோவிந்தம் படத்தில் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











