அமலாபால் மாதிரி நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார்: ‘பிக் பாஸ்’ பிரபல நடிகை அதிரடி

நல்ல கதை அமைந்தால் தானும் நிர்வாணமாக நடிக்கத் தயார் என நடிகை பிந்துமாதவி தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆடை படத்தில் அமலாபால் நடித்தது போல், தானும் நிர்வாணமாக நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகை பிந்துமாதவி தெரிவித்துள்ளார்.

தன் அழகான கண்களால் சின்ன சிலுக்கு என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிந்து மாதவி. கழுகு உள்பட சில படங்களில் நடித்துள்ள போதும், மக்களிடம் அவரை மேலும் பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் மூலம் வீட்டிற்குள் நுழைந்த பிந்து, கடைசி வரை இருந்து மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். இந்த வாரம் கிருஷ்ணா ஜோடியாக அவர் நடித்த கழுகு 2 படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாகத்திலும் இந்த ஜோடியே நடித்திருந்தது.

இந்நிலையில், கழுகு 2 பட புரொமோசனுக்காக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் பிந்து மாதவி. அப்படியான ஒரு பேட்டியில், 'ஆடை படத்தில் அமலாபால் நடித்தது போன்று, தானும் நிர்வாணமாக நடிக்கத் தயாராக இருப்பதாக' தெரிவித்துள்ளார் பிந்து மாதவி.

அமலாபாலுக்கு பாராட்டு:

அமலாபாலுக்கு பாராட்டு:

அதோடு, ‘ஆடை படத்தில் அமலாபால் செய்த தைரியமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஒரு வெகுளிப் பெண் வில்லன்களிடம் சிக்கி, அவர் மேல் மக்களுக்கு பரிதாபம் வருவது போல் திரைக்கதை உருவாக்காமல், படத்தின் ஆரம்பம் முதலே அமலாபாலை தைரியமான பெண்ணாக காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.

பெருமை:

பெருமை:

அவர் பிரச்சினையில் சிக்கிக் கொள்வதை சுவாரஸ்யமாகவும், அதை அவர் தைரியமாக எதிர்கொள்வது மாதிரியும் காண்பித்தது அருமையாக இருக்கிறது. இந்த முயற்சியை துணிந்து எடுத்த அமலாபாலை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. நிச்சயம் அவரைப் பாராட்ட வேண்டும்.

நானும் தயார்:

நானும் தயார்:

இதுபோல் நிர்வாணமாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயார். என்னை பொறுத்தவரை படம் வெற்றிபெற வேண்டும் அதற்காக நான் எந்த எல்லை வரை சென்று கடுமையாக உழைக்கவும் தயார். அதற்கு ஏற்றார் போல் நல்ல கதையும் அமையவேண்டும்' என்பது தான் முக்கியம்' என பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

இந்த சீசன் ஓவியா:

இந்த சீசன் ஓவியா:

இதேபோல் தற்போதைய பிக் பாஸ் சீசன் 3யில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு, சாண்டி பெயரை அவர் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் லாஸ்லியா தான் ஓவியா போன்று நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X