'போதுங்க... இன்னும் 2, 3 வருஷம்தான்...' என்னங்க, நடிகை சமந்தா இப்படி ஒரு முடிவை எடுத்திட்டாரே?
Recommended Video
ஐதராபாத்: இன்னும் இரண்டு மூன்று வருடங்கள்தான் சினிமாவில் நடிப்பேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் சமந்தா.
தெலுங்லிலும் நடித்து வருகிறார். பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன்.
இப்போ வர படம் எல்லாமே கவுச்சி தான்.. பாரதிராஜா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

96 படத்தின் ரீமேக்
சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் கோவாவில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கிறார். இப்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். சர்வானந்த் ஹீரோ.

சமந்தாவின் நடிப்பு
தமிழில் த்ரிஷா நடித்த கேரக்டரில், சமந்தா நடிக்கிறார். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.

2, 3 வருடங்கள்
இந்நிலையில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் மட்டும்தான் சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா. ஜானு படத்தின் புரமோஷனுக்காக செய்தியாளர்கள் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. அப்போது இதுபற்றி அவர் கூறும்போது, சினிமாவில் ஹீரோயின்களுக்கு ஆயுள் குறைவு. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றார்.

குடும்பம் பற்றி
அவர் மேலும் கூறும்போது, எனக்குத் திருமணமாகிவிட்டது. நானும் என் குடும்பம் பற்றி யோசிக்க வேண்டும். அதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன். நான் நடித்து அடுத்து வெளிவரும் படங்களில் என்றும் நினைவில் நிற்கும்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











