twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் அதை நினைச்சே பார்க்கலைங்க... கீர்த்தி சுரேஷ்

    By
    |

    சென்னை: எனக்கு கிடைத்த தேசிய விருதை மறைந்த நடிகை சாவித்ரிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

    தமிழில், இது என்ன மாயம், ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உட்பட பல படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துவருகிறார்.

    இவர், முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம், தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவானது.

    தேசிய விருது

    தேசிய விருது

    இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. விருது பெற்ற பின் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கீர்த்திக்கு, கேக் வெட்டி படக்குழு பாராட்டைத் தெரிவித்தது.

    விவரிக்க முடியாது

    விவரிக்க முடியாது

    இந்நிலையில், விருது வாங்கிய போது என் மனநிலையை விவரிக்க முடியாது. என் பெயரை விருதுக்கு அறிவித்ததும் நெகிழ்ந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த விருதை சாவித்ரி அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் அவர் சொன்னார்.

    தயங்கினேன்

    தயங்கினேன்

    'நான் அதிக படங்களில் நடிக்கவில்லை. அதற்குள் எனக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இந்த கேரக்டரில் நடிப்பதற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது என் அம்மா. மற்றொருவர் என் மாமா கோவிந்த். முதலில் இவ்வளவு வெயிட்டான கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று தயங்கினேன்.

    நம்பிக்கை அளித்தவர்

    நம்பிக்கை அளித்தவர்

    இவர்கள்தான் என்னை சம்மதிக்க வைத்தனர். அடுத்தது, இயக்குனர் நாக் அஸ்வின். என் மீது நம்பிக்கை வைத்து கதை சொன்னவர் அவர்தான். எனக்கு நம்பிக்கை அளித்தவரும் அவர்தான். இந்த விருதுக்கு பிறகு எனக்குப் பொறுப்பு அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன். அதனால் சிறந்த கதைகளைத் தேர்வு செய்தே நடிக்கிறேன் என்றார்.

    English summary
    keerthy suresh says she Never imagined a national award so early in her career and she dedicate this award to Savitri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X