»   »  சிவகார்த்திகேயனுக்கு தூதுவிடும் த்ரிஷா!

சிவகார்த்திகேயனுக்கு தூதுவிடும் த்ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் விஜயகாந்த் வளரும் நடிகராக இருந்த காலம் அது. டாப் நடிகைகள் யாரும் அவருடம் ஜோடி சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டனர்.

ஆனால் அவர் வளர்ந்து பாக்ஸ் ஆபீஸ் நாயகனான பிறகு அத்தனை நாயகிகளும் அவருடன் ஜோடி போட வரிசையில் நின்றனர்.

I never rejects Sivakarthikeyan, says Trisha

சிவகார்த்திகேயனும் கிட்டத்தட்ட அப்படித்தான். மெரினா, மனம் கொத்திப் பறவை ஆகிய படங்களில் நடித்து முடித்திருந்த நேரத்தில் சிவாவை யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளும் தயாராக இல்லை.

அந்த நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போன்ற நடிகைகள் அவருடன் நடித்துவிட்டனர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்' வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திரிஷா சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

அரண்மனை 2 படத்தின் புரமோஷன் நிகழ்சிக்காக இணையதளத்தில் லைவ் சாட் செய்த த்ரிஷாவிடம் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்தள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதே, எதனால்?" என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த திரிஷா, ‘இந்த செய்தியில் உண்மையில்லை. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற தயார்' என்று கூறியுள்ளார்.

இதனை அறிந்த சிவகார்த்திகேயன் த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

English summary
Trisha says that she never rejects Sivakarthikeyan and ready to act with him

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil