கர்ப்பிணியாக நடிக்க நான் மறுக்கவில்லை... இயக்குநர்தான் கதையை மாற்றினார்! - நயன்தாரா

By Shankar

கஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகா (நீ எங்கே என் அன்பே) படத்தில் கர்ப்பிணியாக நடிக்க தான் மறுத்ததாகக் கூறப்படுவது உண்மையில்லை என்றார் நயன்தாரா.

கஹானி படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருந்தார். அதனால் அந்தப் பாத்திரத்துக்கு அனுதாபம் கிடைத்தது.

ஆனால் நயன்தாராவோ புதிதாக திருமணமான பெண்ணாக மட்டும் நடித்தார். கர்ப்பிணியாக நடிக்க அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை நயன்தாரா மறுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கஹானி ரீமேக்கில் நடிக்க நான் ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் என் பாத்திரத்தை கர்ப்பிணியாக இருக்க வேண்டாம் என மாற்றியவர் இயக்குநர்தான்.

ஏற்கனவே ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் கர்ப்பிணியாகவும் இரு குழந்தைகளின் தாயாகவும் நடித்து இருக்கிறேன். என்னை பொருத்தவரை எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் கமர்சியல் படங்களின் கதாநாயகிதானே," என்றார்.

இனி கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X