அந்த வேலையை நான் செய்யல! - குஷ்பு

By Shankar

பிரபு தேவா - நயன்தாரா இடையே மீண்டும் உறவைப் புதுப்பிக்க நான் எந்த வேலையும் செய்யவில்லை, என்று மறுப்பு தெரிவித்துள்ளார் குஷ்பு.

பிரபு தேவா - நயன்தாரா திருமணம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.

இப்போது நயன்தாரா மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். மூன்று தெலுங்கு படங்களிலும் இரு தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதற்கிடையில் நயன்தாராவைவும் பிரபுதேவாவையும் மீண்டும் சேர்த்து வைக்க நடிகை குஷ்பு முயற்சிப்பதாகவும், இருவரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது, "பிரபுதேவாவும் நயன்தாராவும் எனக்கு நல்ல நண்பர்கள். பிரபுதேவாவை எனக்கு ரொம்ப நாட்களுக்கு முன்பே தெரியும்.அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அறிவேன். பிரபுதேவா தனித்து முதன் முதலில் பாடலுக்கு நடனம் அமைத்தது எனது படத்தில்தான். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையில் நான் சமரசம் பேசவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். இருவரையும் மதிக்கிறேன். ஆனால் அவர்களுக்கிடையே சமாதானம் செய்வது என் வேலையல்ல," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X