twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியா மீது கடும் கோபத்தில் மணிப்பூர் மக்கள்..: சொல்கிறார் 'மேரிகோம்' பிரியங்கா சோப்ரா

    By Mathi
    |

    மும்பை: இந்தியா மீது மணிப்பூர் மக்கள் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்கிறார் வெற்றிப்படமான 'மேரிகோம்' நாயகி பிரியங்கா சோப்ரா.

    இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோமின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 'மேரிகோம்' திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. பல மாநில அரசுகள் மேரிகோம் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துள்ளன.

    இந்த திரைப்படம் குறித்து 'மேரிகோம்' நாயகி பிரியங்கா சோப்ரா கூறியுள்ளதாவது:

    2 ஆண்டுகால உழைப்பு

    2 ஆண்டுகால உழைப்பு

    மேரிகோம் திரைப்படத்தில் நடித்தது மிகவும் சவாலானது. இதற்காக 2 ஆண்டுகாலம் உழைத்தேன். மேரிகோமுடன் தங்கி அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் உள்வாங்கிக் கொண்டேன்.

    கடும் கோபத்தில் மணிப்பூர்வாசிகள்

    கடும் கோபத்தில் மணிப்பூர்வாசிகள்

    மணிப்பூருக்கு நான் சென்ற போதெல்லாம் அந்த மக்கள் இந்தியா மீது கடும் கோபத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

    கோபம் ஏன்?

    கோபம் ஏன்?

    இந்தியாவால் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற வேதனையில் இருக்கின்றனர். அவர்கள் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.

    தணியும்

    தணியும்

    தற்போதைய மேரிகோம் திரைப்படம் மூலம் மணிப்பூர் மக்களும் இந்த நாட்டின் ஒரு அங்கம் என உணர்ந்திருப்பார்கள் எனக் கருதுகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

    English summary
    Don't let her looks, fame and celebrity fool you- Priyanka Chopra, a leading lady on a mission with the box office turner 'Mary Kom' knows exactly how to accomplish her missions in full swing. She said that People are very angry in Manipur with India as such. I hope this film helps them feel a part of the country that they are.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X