twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 வயசுல வீட்டை விட்டு எஸ்கேப்.. 2 வருஷம் போதைக்கு அடிமை... பிரபல நடிகையின் பகீர் பிளாஷ்பேக்!

    By
    |

    மும்பை: தனது 15 வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்டேன் என்றும் இரண்டரை வருடம் போதைக்கு அடிமையாகி இருந்தேன் என்றும் பிரபல ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Celebrity Cooking Challenge | Shanthanu KiKi | Roja | Self Quarantine

    இந்தி நடிகை கங்கனா ரனவத், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.

    இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர்.

    திடீர்னு.. சமுத்திரகனியை வச்சு செய்யும்.. மீம் கிரியேட்டர்கள்.. என்னாச்சு!திடீர்னு.. சமுத்திரகனியை வச்சு செய்யும்.. மீம் கிரியேட்டர்கள்.. என்னாச்சு!

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார். எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி நடிக்கிறார். அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

    பாலிவுட்டில் கஷ்டம்

    சமீபத்தில் நடிகை கங்கனா, சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை மும்பையின் பாலி ஹில் பகுதியில் தொடங்கியுள்ளார். மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற இந்த ஸ்டூடியோவின் திறப்பு விழாவில் கங்கனாவின் சகோதரி ரகோலி சந்தல், அவர் மகன் பிரித்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கங்கனா சார்பில் அவரது டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட்டில், தான் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார்.

    போதைக்கு அடிமை

    போதைக்கு அடிமை

    'நான் 15, 16 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். அந்த நட்சத்திரங்களை என் கைகளால் பிடித்துவிட முடியும் என்று உணர்ந்தேன். பிறகு சினிமாவுக்கு வந்தேன். ஒன்றரை, இரண்டு வருடம் போதைக்கு அடிமையாகி இருந்தேன். என் வாழ்க்கை குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட வகை மக்களுடன் இருந்தேன். மரணம் மட்டுமே அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றி இருக்க முடியும். நான் டீனேஜில் இருந்தபோது இதெல்லாம் நடந்தது.

    ராஜயோகா

    ராஜயோகா

    அப்போது என் வாழ்வில் ஒரு நல்ல நண்பர் வந்தார். அவர் எனக்கு யோகாவை அறிமுகப்படுத்தினார். ராஜயோகா பற்றிய புத்தகத்தைக் கொடுத்தார். பிறகு சுவாமி விவேகானந்தரை என் குருவாக ஏற்றுக்கொண்டு என்னை நானே வளர்த்துக்கொண்டேன்.
    அந்த சவாலான நேரங்கள் என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், நான் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பேன்.

    நல்ல நேரம்

    நல்ல நேரம்

    ஆன்மிக வழிகாட்டுதல் இல்லாமல் என் மனோதிடத்தை வளர்த்துக் கொண்டிருக்க முடியாது. என் புத்தியையோ, திறமையையோ, உடல் அரோக்கியத்தையோ என்னால் வளர்த்திருக்க முடியாது. அதனால் நான் சொல்ல வருவது, இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கெட்ட நேரங்கள் மட்டுமே நல்ல நேரமாக இருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் ஏராளமானோர் வரவேற்றுள்ளனர்.

    English summary
    Actress Kangana Ranaut shared the story of her initial days in Bollywood and the challenges she faced at that time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X