ச்சே.. நான் வேண்டாம்னு சொல்ற படம்லாம் மட்டும் செம ஹிட்டாயிடுது! புலம்பும் நடிகை!
சென்னை: நான் நடிக்க மறுக்கும் படங்கள் மற்ற நடிகைகள் நடித்தால் சூப்பர் ஹிட்டாகி விடுகிறது என நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தெலுங்கு நடிகையான லாவண்யா திரிபாதி தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு லாவண்யாவுக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பெரும் இடைவெளிக்குப் பிறகு மாயவன் என்ற படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தலைக்காட்டினார். ஆனால் அந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

பெரிதாக ஓடுவதில்லை
அதேநேரத்தில் தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர் நடிக்கும் படங்கள் எதுவும் பெரிதாக ஓடுவதில்லை. அதேநேரத்தில் அவர் நடிக்க மறுக்கும் படங்கள் செம ஹிட்டாகி விடுகிறது.

வருந்துவதில்லை
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை லாவண்யா, நான் நடிக்க மறுக்கும் படங்கள் ஹிட்டாகி விடுகிறது. அதற்காக நான் வருந்துவதில்லை.

கதைகள் வருவதில்லை
நான் நடிக்க மறுக்கும் கேரக்டர்களில் மற்ற நடிகைகள் நடித்தால் நன்றாக ஓடுகிறது. நான் நடிக்க விரும்புவது போன்ற கதைகள் வருவதில்லை.

எண்ணமில்லை
எனக்கு பிடித்த கதைகளில்தான் நான் நடித்து வருகிறேன். மற்ற நடிகைகளை பார்த்து நாமும் முன்னுக்கு வரவேண்டும் என்றும் என்ற எண்ணமெல்லாம் எனக்கில்லை.

நடிக்க முடியல
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க எனக்குதான் வாய்ப்பு வந்தது. அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் வேறு சில காரணங்களால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. இவ்வாறு நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











