சூர்யாவை தெரியாது தான், ஆனால் தெரியும்: கரீனா கபூர் மழுப்பல்
மும்பை: நான் சூர்யாவை யார் என்றே தெரியாது என கூறவில்லை. அவரை சந்தித்தது இல்லை அதனால் தெரியாது என்றேன் என பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் குத்தாட்டம் போடுகிறார் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து கரீனாவிடம் கேட்டதற்கு அவரோ சூர்யாவா, லிங்குசாமியா அவர்கள் யார் என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.
இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். இதையடுத்து இது குறித்து கரீனா கூறுகையில்,

தெரியாதது தான்
சூர்யாவை எனக்கு தெரியாதது தான். அவரை நான் சந்தித்ததே இல்லை. அதனால் தான் நான் அப்படி கூறினேன்.

சூர்யா
சூர்யாவை எனக்கு நிச்சயம் தெரியும். அவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர். உண்மையில் அவர் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

குத்தாட்டம்
அஞ்சான் படத்தில் நான் குத்தாட்டம் போடுவதாக வந்த செய்திகளை பார்த்து கொஞ்சம் டென்ஷனாகிவிட்டேன்.

சிங்கம் 2
தமிழில் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடித்து வருகிறேன். எனக்கு அவரை தெரியும்.

லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமியை நான் சந்தித்ததும் இல்லை அவர் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதாக ஒப்புக் கொள்ளவும் இல்லை. அப்படி இருக்கையில் நான் டான்ஸ் ஆடுவதாக எப்படி கூறலாம்?

சூர்யாவுடன்
சூர்யா மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் இந்தி படத்தில் நடித்தால் அவருடன் நடிக்க விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியும், கௌரவமும் கூட என்றார் கரீனா.


Click it and Unblock the Notifications











