சூர்யாவைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னேன்: சமந்தா
அஞ்சானில் அழகுப் புயலாக அசத்தியுள்ள சமந்தா, கல்லூரி நாட்களில் சூர்யாவைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னாராம். கஜினி படத்தில் சூர்யா நடித்தபோது, பட புரமோசனுக்கு வந்த சூர்யாவை சைட் அடித்தேன் இப்போது அதே சூர்யா உடன் நடிப்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார் சமந்தா.
பள்ளி, கல்லூரி நாட்களில் சராசரி பெண்ணாகத்தான் இருந்தேன். சினிமாவில் நடிக்க வந்த பின்னர்தான், மேக் அப், ஹேர் ஸ்டைல் மேன் உபாயத்தில் அழகாக மாறியிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்லுகிறார் சமந்தா.

செம பிகர் இல்லை
நான் படிக்கும் போது என்னை யாரும் செம பிகர் என்று சொன்னதில்லை. நிறைய மெனக்கெட்டு என்னை அழகாக மாற்றிக்கொண்டுள்ளேன் என்கிறார் சமந்தா.

ஐ லவ் யூ சூர்யா
ஐந்து வருடத்திற்கு முன்பு கஜினி பட புரமோசனுக்காக கல்லூரிக்கு வந்த சூர்யாவைப் பார்த்து, ஐ லவ் யூ சூர்யா என்று கத்தியிருக்கிறேன்.

நம்ப முடியவில்லை
அந்த சம்பவத்தை சூர்யாவும் மறக்கவில்லை. இப்போது அதே சூர்யா உடன் சேர்ந்து நடிக்கிறேன் என்பது நம்ப முடியாத விசயம்தான்.

ரொமான்ஸ் காட்சிகள்
சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடிக்கக் காரணம் கவுதம் மேனன்தான். அவர்தான் இந்த உயரத்தைக் கொடுத்தார். அவருக்குத்தான் நன்றி சொல்லனும்.

நான் செம பிஸி
நான் ஈ பட வெற்றிக்குப் பின்னர் அஞ்சான், கத்தி, விக்ரமுடன் ஒரு படம் என இந்த ஆண்டு நான் ரொம்ப பிஸி என்ற சமந்தா, வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் எப்பவும் மாறலாம் தத்துவமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











