உண்மையான அன்பை உங்களிடம் பார்க்கிறேன்.. பெற்றோர் திருமண நாளுக்கு பிரபல நடிகை உருக்கமான போஸ்ட்!

By

சென்னை: தனது பெற்றோர் திருமண நாளை முன்னிட்டு, பிரபல நடிகை உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Aranthangi Nisha Marriage Video | Nisha & Riyaz

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.

கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

சிவராஜ்குமார்

சிவராஜ்குமார்

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திருமண நாள்

மேலும் இன்ஸ்பெக்டர் விக்ரம் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது பெற்றோர்களின் திருமண நாளை முன்னிட்டு வெளியிட்ட உருக்கமானப் பதிவு அது. இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

விவரிக்க முடியாது

விவரிக்க முடியாது

அதில், அற்புதமான பெற்றோர்கள் கிடைத்ததன் மூலம் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன். அதை என்னால் விவரிக்க முடியாது. உங்கள் இருவரிடமும் தூய்மையான அன்பைப் பார்க்கிறேன். ஒரு மகளாக உங்களிடம் முழுமையை உணர்கிறேன். உங்களுக்குத் திருமண நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ள பாவனா, தனது தந்தை பற்றியும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மறையாது

மறையாது

அதில், 'அப்பா, நீங்கள் இப்போது எங்களுடன் இல்லை என்றாலும் உங்கள் மீதான எங்கள் அன்பு ஒரு போதும் மறையாது' என்று தெரிவித்துள்ளார். பாவனாவின் தந்தை பாலச்சந்திரன், புகைப்படக் கலைஞர். கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X