கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
சென்னை: 20 வருடத்திற்கு பிறகு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், கில்லி படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தான் தான் நடிக்க வேண்டியது என்று நடிகை கிரண் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீ சூரியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் 2004 ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், , நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம், பாண்டு, வினோத் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி என பலர் நடித்திருந்தனர். விஜய் கபடி வீரராக நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. நடிகர் விஜய் திரைப் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாகும்.

கில்லி ரீ ரிலீஸ் : இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தியேட்டரில் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. .உலக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் கில்லி ரீ ரிலீஸ் படத்தை சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். கில்லி திரைப்படம் எவர் கிரின் திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாட்ஷா திரைப்படம் என்றால், தளபதி விஜய்க்கு கில்லி. இன்னும் 20 வருஷம், 50 வருஷம் ஆனாலும் கில்லி படத்திற்கு இருக்கும் மாஸ் குறையவே குறையாது என்று விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
முதல் நாள் வசூல்: 600க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியான கில்லி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது முதல் நாளில் மட்டுமே படம் உலகம் முழுவதும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. கில்லி படத்தின் வரும் வசனம் போல, இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம் அந்த இடம், எல்லா ஏரியாலயும் ஐயா கில்லி டா என்பதை கில்லி படம் நிரூபித்து உள்ளது என ரசிகர்கள் இணையத்தில் கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இணையத்தில் செம வைப்: உலகளாவிய முன்பதிவில் சுமார் ₹3 கோடி வசூலித்துள்ளது என்றும், விஜய்யின் முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தள்ளது. அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கில்லி படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான அர்ஜுனர் வில்லு, அப்படி போடு ஆகிய பாடல்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
நான் நடிக்க வேண்டியது: இந்நிலையில் நடிகை கிரண் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் கில்லி படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. அப்போது தான், காதலித்துக்கொண்டு இருந்ததால், அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைப் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு இது, சினிமாவிற்கு வரும் இளம் நடிகைகள் தயவு செய்து காதலிக்காதீர்கள், உங்கள் கனவை அடைந்துவிட்டு காதல் செய்யுங்கள் இதுதான் என் அறிவுரை என்று நடிகை கிரண் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











