'காதலிச்சு கல்யாணம் பண்ணின பிறகு பார்த்தா, ஆம்பளை..அது நான்தான்!' அதிர்ச்சி கொடுக்கும் பிரபல நடிகை!

By

மும்பை: பிரபல நடிகை தெரிவித்துள்ள கதை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Reshma Pasupuleti Stunning dance moves, Star Sunita, Preethi sharma | Lock down Diaries

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

பல்வேறு நாடுகளில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லாக்டவுன் நீட்டுக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது இந்த உயிர்க்கொள்ளி வைரஸ்.

தினமும் பதிவு

தினமும் பதிவு

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். அவர்கள் தினமும் ஏதாவது வீடியோ, போட்டோ என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். தினமும் எதையாவது பதிவு பண்ணும் நடிகைகளில் அடா சர்மாவும் ஒருவர்.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் போட்டோஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவார். இவர், இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

மேன் டு மேன்

மேன் டு மேன்

இப்போது, மேன் டு மேன் என்ற இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, இதுவரை யாரும் நடிக்காத கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன். அப்படித்தான் இதுவரை நடித்து வருகிறேன். இல்லை என்றால், இது வழக்கமான ஒன்றுதானே என்று ரசிகர்களுக்கும் போரடித்துவிடும். அடுத்து நடிக்கும் மேன் டு மேன் படமும் வித்தியாசமான கதையை கொண்டதுதான்.

பெண்ணாக மாறியவர்

பெண்ணாக மாறியவர்

ரொமான்டிக் காமெடி படம். ஒருவர் ஒரு பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். பிறகு திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்துக்குப் பிறகுதான் தெரிகிறது, அந்தப் பெண், ஆணாக இருந்து ஆபரேஷன் மூலம் பெண்ணாக மாறியவர் என்று. இதனால் நடக்கும் பிரச்னைகளும் குழப்பங்களும்தான் கதை. அந்த பெண்ணாக நான் நடிக்கிறேன். அபிர் சென்குப்தா இயக்குகிறார்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X