நான் டோலிவுட் 'குயீன்' ஆக மறுத்துவிட்டேன், ஏன் தெரியுமா?: சமந்தா விளக்கம்
சென்னை: குயீன் தெலுங்கு ரீமேக்கில் தான் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை சமந்தா தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயீன் இந்தி படம் சூப்பர் ஹிட்டானது. படத்தை கங்கனா தான் தனது நடிப்பால் தூக்கி நிறுத்தினார் என்று விமர்சகர்கள் பாராட்டினர். இந்நிலையில் குயீன் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
தமிழ் ரீமேக்கில் கங்கனா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை நர்கிஸ் ஃபக்ரி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமந்தா
குயீன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க டோலிவுட்டில் முன்னணி நாயகியான சமந்தாவிடம் கேட்டார்களாம். ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

ஹீரோயின்
கமர்ஷியல் படங்களாக நடித்து போரடித்துவிட்டது அதனால் ஹீரோயினை மையமாக வைத்து வரும் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறிய சமந்தா ஏன் குயீன் படத்தில் நடிக்க மறுத்தார் என்று நீங்கள் நினைக்கலாம்.

காரணம்
குயீன் படத்தின் கதை முழுக்க முழுக்க ஹீரோயினை சுற்றித் தான் நகரும். அப்படி இருந்தும் அந்த படத்தில் நடிக்க சமந்தா மறுத்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

விமர்சனம்
குயீன் ரீமேக்கில் நான் வித்தியாசமாக நடிக்க முயன்றால் இது என்ன இவர் நல்லாவே நடிக்கவில்லை என்பார்கள். ஒரிஜினல் படத்தில் நடித்த நடிகையை போன்று நடித்தால் பாரு, அப்படியே காப்பியடித்து நடித்திருக்கிறார் என்பார்கள். இப்படி அனைத்திலும் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள் என்றார் சமந்தா.

ஒப்பீடு
என்னை பிற நடிகைகளுடன் ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. அதனால் தான் ரீமேக் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று சமந்தா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











