ஆறு மணி ஆனதும் ஷூட்டிங்ல நான் போண்டா சாப்பிடுவேன்.. ஜோ சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம் !

சென்னை: வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

முகவரி, குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, தெனாலி என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார் நடிகை ஜோதிகா.

சூட்டிங் ஸ்பாட்டில் தான் செய்யும் ரகளை பற்றியும், சிம்ரனை பற்றியும் கூறிய த்ரோ பேக் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

 2கே கிட்ஸ் பேவரைட்

2கே கிட்ஸ் பேவரைட்

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்த வாலி படத்தில் சோனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஜோதிகா. அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஜோதிகா அதன் பிறகு அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி, ரிதம் உயிரிலே கலந்தது, தெனாலி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். 2கே கிட்சின் பேவரைட் நடிகைகளான சிம்ரன் மற்றும் ஜோதிகா அப்பொழுது முன்னணி நடிகைகளாக இருந்து வந்தனர். ஒல்லியான தோற்றத்தில், நடன புயலாக இருந்த சிம்ரனும், பப்ளியாக இருந்த ஜோதிகாவும் அப்போது முன்னணி நடிகைகளாக இருந்தனர். மாறி மாறி பல ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கு முக்கியத்துவம்

டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, காக்க காக்க, திருமலை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார் ஜோதிகா.

முதல் படத்திலேயே சூர்யாவுடன் இணைந்த ஜோதிகா ஜோடி பிரபலமான பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர் பிறகு, பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், காக்க காக்க, பேரழகன் போன்ற படங்களில் இவர்களது ஜோடி அனைவரையும் கவர்ந்தது. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார், இந்த படத்திற்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் ஹீரோயின் சார்ந்த படங்கள் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.

சிம்ரன் ரசிகை

சிம்ரன் ரசிகை

மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என்று தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் ஜோதிகா. ஜோதிகா பேசிய த்ரோ பேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டு கொண்டிருக்கிறது.மாயாவி படத்தில் சூர்யா, சிம்ரன் ரசிகையாக நடித்திருப்பார், இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ஜோதிகா சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார் .

அம்மாவுக்கும் பிடிக்கும்

அம்மாவுக்கும் பிடிக்கும்

இது பற்றி ஜோதிகா கூறுகையில் என் அம்மா எப்பவுமே சிம்ரனை புகழ்வார், பார்ப்பதற்கு எவ்வளவு ஸ்லிம்மாக இருக்காங்க.. அவங்க டான்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு என்று கூறிக் கொண்டே இருப்பார். சூர்யாவுக்கும் இந்த விஷயம் தெரியும். ஆனால் நான் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் 6 மணி ஆனதும், பசி தாங்க முடியாமல் போண்டா, பஜ்ஜி ஆர்டர் செய்து நான் சாப்பிடுவேன் என்று ஜோதிகா சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X