»   »  எனக்கு 'பாய் பிரெண்ட்ஸ்' ஜாஸ்தி: சொல்வது லட்சுமி மேனனுங்கோ

எனக்கு 'பாய் பிரெண்ட்ஸ்' ஜாஸ்தி: சொல்வது லட்சுமி மேனனுங்கோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்றும், தோழிகள் குறைவு என்றும் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

ரத்ன சிவா இயக்தத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து லட்சுமி மேனன் நடித்துள்ள றெக்க படம் வரும் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் பிகினி காட்சியில் நடிக்க தயார் என்று கூறி அதிர வைத்துள்ளார் லட்சுமி மேனன்.

றெக்க மற்றும் நண்பர்கள் பற்றி லட்சுமி கூறுகையில்,

றெக்க

றெக்க

றெக்க படத்தில் நடித்தது ஜாலியாக இருந்தது. படத்தில் என்னை கடத்தும் விஜய் சேதுபதி மீது எனக்கு காதல் வரும். அதற்கு மேல் கதையை சொன்னால் நான் அவ்வளவு தான்.

கிசுகிசு

கிசுகிசு

இவரை பற்றி கிசுகிசு எழுதினால் ரசிகர்கள் படிப்பார்கள் என்பதால் தானே எழுதுகிறார்கள். அதனால் என்னை பற்றி கிசுகிசுக்கள் வந்தால் சந்தோஷப்படுவேன், வராவிட்டால் தான் கவலைப்படுவேன்.

பாய் பிரெண்ட்ஸ்

பாய் பிரெண்ட்ஸ்

நான் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து தனியாக வெளியே செல்வேன். வெளிநாட்டுக்கு சென்றால் துணிச்சலாக தனியாக செல்வேன். ஆனால் இங்கு ஆண் நண்பர்களுடன் செல்கிறேன். எனக்கு தோழிகள் ரொம்ப குறைவு.

இது இந்தியா

இது இந்தியா

நான் தனியாக வெளியே சென்றால் என் வீட்டில் பயப்படுவார்கள். வீடு திரும்பியதும் பத்திரமாக வந்துட்டேன்ல என்பேன். இது இந்தியா பார்த்து இருக்க வேண்டும் என்பார்கள்.

English summary
Actress Lakshmi Menon said that she has more friends who are boys than girls.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil