எனக்கு இன்னும் திருமண வயசே ஆகலப்பா: நயன்தாரா கொஞ்சல்ஸ்
சென்னை: தனக்கு இன்னும் திருமண வயேத வரவில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்ததும் நடித்தார் பல இயக்குனர்கள் அவரை கிளாமர் கதாபாத்திரத்திற்கு சரிபட்டுவர மாட்டார் என்றே நினைக்கத் துவங்கினர். மேலும் நயன் தன் மீது மரியாதை வர வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தார்.
இதைப் பார்த்தவர்கள் இனி நயனுக்கும், கிளாமருக்கும் சரி பட்டுவராது என்று முடிவே கட்டிவிட்டனர். இது காத்து வாக்கில் அவர் காதில் விழவே அடப்பாவமே என்னை பற்றி இப்படியா நினைக்கிறார்கள். யார் சொன்னது எனக்கு கிளமார் வராதுன்னு என்று மனுஷி பொங்கிவிட்டாராம். மேலும் நயனுக்கு வயதாகிவிட்டது என்று சில இயக்குனர்கள் நினைத்து அவர் நடிக்கும் படங்களில் கிளாமருக்கு வேறு ஒரு நடிகையையும் சேர்த்துள்ளனர். இது முதலில் நயனுக்கு புரியவில்லை, புரிந்தவுடன் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

கல்யாண வயசே வரல
தன்னை வயதானவள் என்று நினைத்தவர்களிடம் தான் ஒன்றும் பாட்டியாகிவிடவில்லை என்றும், திருமண வயதே இன்னும் வரவில்லை என்றும் நயன் தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங்கிற்கு கவர்ச்சியாக வரும் நயன்
படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கிளாமர் காட்ட முடியும் என்று ஷூட்டிங்கிற்கு கவர்ச்சியாக வருகிறாராம் நயன்.

நானும் யூத் தான்
நானும் இளமையானவள் தான், இளமையான கதாபாத்திரங்களில் என்னை நடிக்க வையுங்கள் என்று தனது அபிமான இயக்குனர்களிடம் நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











