டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மறுக்கிறார்

By Siva

டேம் 999 படத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. என் பெயரில் யாரோ போலியாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் டேம் 999 என்ற படத்தில் காட்டியுள்ளனர். மலையாள இயக்குனர் சோஹன்ராய் எடுத்த இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா பெயரில் டேம் 999 படத்துக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன நயன்தாரா அதை மறுத்தும், கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"நான் டுவிட்டரிலும் இல்லை. பேஸ்புக்கிலும் இல்லை. என் பெயரில், யாரோ வேண்டாதவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். டேம் 999' படம் பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. என் பெயரில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X