புதிய காதல் எப்படி?… ஆண்ட்ரியா
காதலோ, கிசுகிசுவோ எப்போதும் ஆண்ட்ரியாவை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும். செல்வராகவன் தொடங்கி இப்போது இயக்குநர் பாசில் மகன் ஃபகத் வரை ஆண்டிரியாவின் காதல் லிஸ்ட்டில் இருக்கின்றனர்.
அழகோடு அறிவும் இருக்கிறது அனைவராலும் பாராட்டப்படும் நடிகை அதனால்தான் உலகநாயகன் கமல் கூட விஸ்வரூபத்தில் விரும்பி வாய்ப்பு கொடுத்தார் என்கின்றனர்.
என்னதான் காதல் கிசு கிசுக்கள் வெளியானாலும் இப்போதைக்கு காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ யோசிக்கும் முடிவில் தான் இல்லை என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா.

பச்சைக்கிளி ஆண்ட்ரியா
தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெரோமியா. நடிப்பும் மட்டுமல்ல பின்னணி பாடுவதிலும், குரல் கொடுப்பதிலும் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.

செல்வராகவனுடன் கிசு கிசு
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த போது இயக்குநர் செல்வராகவனுடன் கிசுகிசுக்கப்பட்டார். இதில் சோனியா - செல்வராகவன் இடையே பிரிவு உருவானது. ஆனால் அப்படி ஒரு சம்பவமே எங்களுக்குள் நடக்கவில்லை என்பதுபோலத்தான் பேசினார் ஆண்ட்ரியா.

இசையமைப்பாளருடன் நெருக்கம்
பின்னணி பாடியபோது இசையமைப்பாளர் அனிருத்துடன் ஏற்பட்ட நெருக்கம் முத்தம் கொடுப்பது வரை நீடித்தது. இது இணையதளங்களில் வெளியாகி ஹிட் அடித்ததுதான் மிச்சம். ஆமாம் அது உண்மைதான் என்று இருவருமே ஒத்துக்கொண்டனர்.

ஆபாச வார்த்தைகள்
இந்த படம் வெளியான பின்னர் ஆண்ட்ரியா பாடும் பாடல்களில், இலைமறை காய் மறையாக ஆபாச வார்த்தைகளையும் கோர்த்து விடுகிறார்களாம். அதனால், சமீபகாலமாக, யார் தன்னை பாட அழைத்தாலும், பாடலை ஒரு முறை படித்து பார்த்து விட்டே பாட சம்மதிக்கிறார் ஆண்ட்ரியா.

கவர்ச்சிக்கு கண்டிசன்
இனி எத்தனை பெரிய ஹீரோக்களின் படமென்றாலும், லிமிட்டான கிளாமரை மட்டுமே வெளிப்படுத்துவேன் என்ற புதிய கொள்கையையும் கடைபிடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

புதிய காதல் எப்படி?
மலையாளத்தில் பிரபல இயக்குநர் பாசில் மகன் ஃபஹத் உடன் ஆண்ட்ரியாவிற்கு காதல் என்று தற்போது பரபரப்பாக செய்திகள் வெளியாகின்றன. இதில் தந்தைக்கு வருத்தமாம். ஆனால் ஆண்ட்ரியா தரப்பில் இருந்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இப்போதைக்கு திருமணம் இல்லை
ஆனால் ஒரு விசயத்தில் ஆண்ட்ரியா தெளிவாக இருக்கிறார். நான் காதலிக்கும் நபர் நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். என்னைப் பொருத்த வரையில் இப்போதைக்கு காதலோ, கல்யாணமோ எந்த முடிவிலும் இல்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











