மலையாளத்தில் நிறைய நடிக்கனும்.. ஹரிப்ரியாவின் ஆசை!
சென்னை: எனக்கு நிறைய மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக உள்ளது. ஆனால் சிலர் வேண்டும் என்றே என்னைப் பற்றி வதந்தி கிளப்பி விட்டு வருகிறார்கள் என்று விசனப்படுகிறார் ஹரிப்ரியா.
வல்லக்கோட்டை படத்தில் அறிமுகமானவர் ஹரிப்ரியா.மூக்கும் முழியுமாக நல்ல லட்சணத்தில்தான் இருக்கிறார். இருந்தாலும் முரண் உள்ளிட்ட படங்களைத் தவிர வேறு படங்களில் அவரைப் பார்க்க முடியவில்லை.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடத்திலும் நடித்து வரும் ஹரிப்பிரியா, மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வருகிறாராம். அங்குதான் நிறைய வாய்ப்புகளும் வருகிறதாம்.

திருவம்பாடி தம்பான் ஹரிப்பிரியா
மலையாளத்தில் ஹரிப்பிரியாவுக்கு முதல் படம் திருவம்பாடி தம்பான். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த படம் பத்ராசனம்.

அப்பாயி கிளாஸ் அம்மாயி மாஸ்
தெலுங்கில் அப்பாயி கிளாஸ், அம்மாயி மாஸ் என்ற படத்தில் நடித்துள் ஹரிப்பிரியா, சந்தேஷ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.இரு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளதாம். ஹரிப்பிரியாவும் எதிர்பார்ப்புடன் உள்ளார்.

கன்னடத்தில் 2
தாய்மொழியான கன்னடத்திலும் கை நனைத்துள்ளார் ஹரிப்பிரியா. தற்போது 2 படங்களில் நடித்து முடித்திருக்கிறாராம். படம் வந்ததும் அங்கும் ஹரிப்பிரியாவின் மார்க்கெட் சூடாகி விடுமாம்.

மலையாளம்தான் பிடிச்சிருக்கு
எனக்கு மலையாளப் படங்கள்தான் பிடித்திருக்கிறது. பத்ராசனம் படம் எனக்குப் பெரிய பிரேக்கைத் தரவில்லை. இருந்தாலும் நிறைய மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்கிறார் கண் நிறைய ஆர்வத்துடன்.

சரி அவருடன் தொடர்பாமே...?
சரி கன்னட அரசியல் தலைவர் ஒருவரது மகனுடன் உங்களுக்கு நெருக்கம் அதிகமாக இருக்கிறதாமே என்று கேட்டால், அதெல்லாம் தேவையில்லாமல் சிலர் பரப்பி விட்ட வதந்திகள். அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை. எனக்கு இதைப் பற்றிக் கவலையே இல்லை என்றார் நெஞ்சை நிமிர்த்தியபடி.
பரவாயில்லையே, ஹரிப்பிரியா தெளிவாகத்தான் இருக்கிறார்...!


Click it and Unblock the Notifications











