Don't Miss!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
''ஞான் நன்னாயிட்டு பாடும்'': வாய்ப்பை எதிர்பார்க்கும் லக்ஷ்மி மேனன்
சென்னை: பாட்டு பாடும் வாய்ப்புகள் வந்தால் அவற்றை நிச்சயம் ஒப்புக் கொள்வேன் என்று நடிகை லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மி மேனன் பேரழகி எல்லாம் இல்லை. ஆனால் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று உள்ளார். மேலும் அவர் நடித்து வரும் படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன.
இதனால் லக்ஷ்மியுடன் ஜோடி சேர ஹீரோக்கள் ஆசைப்படுகிறார்கள்.
பாடகி
இத்தனை நாட்களாக நடிக்க மட்டும் செய்த லக்ஷ்மி மேனனை இமான் பாடகியாக்கியுள்ளார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ‘குக்குறு குக்குறு...' என்ற பாடலை பாடியுள்ளார் லக்ஷ்மி மேனன்.
ஆச்சரியம்
இமான் சார் என்னை பாட அழைத்ததும் எனக்கு ஆச்சிரயமாகிவிட்டது. ஒத்திகையாக நான் பாடத் துவங்கியதும் அவருக்கு என் குரல் பிடித்துப் போய் முழு பாடலையும் பாடி முடிக்குமாறு கூறினார் என்றார் லக்ஷ்மி.
பாட்டி
என் பாட்டி ஒரு மியூசிக் டீச்சர். என் ரத்தத்திலேயே இசை உள்ளது. அதனால் மேலும் பல பாடல்களை பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பாட வாய்ப்பு
தமிழோ, மலையாளமோ எந்த மொழியாக இருந்தாலும் சரி பாட வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதை ஏற்பேன் என்று லக்ஷ்மி மேனன் தெரிவித்தார்.