நான் நடிகையாக அறியப்பட விரும்புகிறேன்.. கதாநாயகியாக அல்ல.. ஷ்ரத்தா செம தில்லுபா!

சென்னை: தான் ஒரு நடிகையாகதான் அறியப்பட வேண்டுமே தவிர கதாநாயகியாக அல்ல என விக்ரம் வேதா பட நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில் இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அடுத்ததாக மாதவன் ஜோடியாக அவர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.. தற்போது, இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிசியாக இருக்கிறார்.

I want to known as a actress not a Heroin: shraddha srinath

தமிழில் உருவாகும் அஜித் நடிக்கும் நேர் கொண்ட பார்வை படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஷ்ரத்தா. இந்தியில் வெளியான 'பிங்க்’ படத்தின் திரைப்பட ரீமேக்கான இந்த படத்தில், டாப்சி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். மீரா என்ற கதாபாத்திரத்தில், தனது உரிமைக்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் வித்யா பாலன், பிக் பாஸ் அபிராமி மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.

இதனிடையே கதாநாயகி என கூறுவதை கண்டு தான் பயப்படுவதாக தெரிவித்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரை கதாநாயகி என குறிப்பிடாமல் நடிகை என குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

கதாநாயன், கதாநாயகி என்ற வார்த்தைகள், நடிகர் - நடிகையர் என்ற வார்த்தைக்கு ஈடாகாது. கதாநாயகன் என்றால், சண்டை காட்சிகளில் அடித்து நொறுக்க வேண்டும். கதாநாயகி என்றால் கிளாமராக இருக்க வேண்டும். ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்.

நான் அப்படி இருக்க விரும்பவில்லை. நடிகை என்றால், கதாபாத்திரத்தை தோற்றத்தில் கொண்டு வந்து நிறுத்துபவராக இருக்க வேண்டும். கதாநாயகி என்ற வார்த்தையே எனக்கு பயமுறுத்துவதாக இருக்கிறது. நடிகையாக இருக்கவே நான் விரும்புகிறேன். இருந்த போதும், கதாநாயகி என்ற வார்த்தையை நான் விரும்பாமலேயே பயன்படுத்தி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X