Tapsee: மோடியா? ராகுலா?.. டாப்ஸி சொன்ன காரணம் இருக்கே.. செம நக்கல் தான் போலயே இந்த பொண்ணுக்கு!
மும்பை: நடிகை டாப்ஸி இந்திய அளவில் அறியப்படும் நடிகை. தமிழில் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த பல படங்கள் உள்ளது. அதேபோல் பாலிவுட், டோலிவுட் என டாப்ஸி இந்திய அளவில் அறியப்படும் பான் இந்தியா ஸ்டாராகவே வலம் வருகிறார். டாப்ஸி கொஞ்சம் நக்கலான நடிகையும் கூட. இப்படி இருக்கையில் இவரது நடிப்பில் உருவாகி கடந்த 20ஆம் தேதி படமான ஆஷி படத்தின் புரோமோஷனின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நக்கலாகவே பதில் அளித்துள்ளார்.
அதாவது படத்தின் புரோமோஷனின் போது உங்களுக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் யார் என்ற கேள்வியை முன் வைத்தபோது, நான் இந்த நாட்டிற்குள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே எனது பதில் மோடி" என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.
இவரது இந்த பதில் தற்போது இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. சில பாஜகவினர் அவரது நக்கலான பதிலை புரிந்து கொள்ளாமல், பிரதமர் மோடி இருந்தால் தான் இந்த நாடு அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கும் என்று டாப்ஸி மறைமுகமாக சொல்லி உள்ளார் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

பழைய சம்பவம்: ஆனால் , பாஜகவினரை ட்ரோல் செய்வது என்றால் அது டாப்ஸிக்கு மிகவும் பிடிக்கும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது மட்டும் இல்லாமல், அதை மிகவும் நக்கலாக செய்யக் கூடியவராகவும் இருக்கிறார். இதற்கு முன்னர் ஒருமுறை சரியாக கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி அனைவரையும் வீட்டு விளக்குகளை அனைத்து விட்டு, மொட்டை மாடியில், பால் கனியில் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றுங்கள் என்று கூறி இருந்தார். மேலும் கைகளைத் தட்டுங்கள் என்றும் கூறியிருந்தார். இவரது பேச்சைக் கேட்டு பலரும் நாடு முழுவதும் இதைச் செய்தார்கள். இது தொடர்பான ட்ரோல் வீடியோக்கள் பலவும் இப்போதும் இணையத்தில் உள்ளன.
கிண்டல்: பிரதமர் மோடி இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதும், டாப்ஸி தனது எக்ஸ் பக்கத்தில், " யோ.. யோ.. நம் அனைவருக்கும் புதிய வேலை வந்துவிட்டது.. யோ.. யோ" என்று நக்கலாக பதிவிட்டிருந்தார். இவரது இந்த போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் பலர் அப்போதே, டாப்ஸியின் இந்த போஸ்ட், பிரதமர் மோடியைத் தான் அவர் அட்டாக் செய்வது போல உள்ளது என்று கருத்து பதிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோலத்தான் பிரதமர் நரேந்திர மோடியா? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா என்ற கேள்விக்கு, நான் இந்த நாட்டிற்குள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே எனது பதில் மோடி" என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











