'தலைவி' சசிகலா கேரக்டர் பற்றி பேசமாட்டேன்... டிசம்பர்லயே இந்திக்கு கூப்பிட்டாங்க... பிரியாமணி
Recommended Video
சென்னை: அஜய் தேவ்கானின் மைதான் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது.
மைதான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கிறார். படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அமித் சர்மா இயக்குகிறார்.

கீர்த்தி சுரேஷ்
இதில் அஜய்தேவ்கன் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார். இதன் ஷூட்டிங்கிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். இதற்கு அவர் உடல் எடையை குறைத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரியாமணி
கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக நடிகை, பிரியாமணியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் இப்போது அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். தமிழில் 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் நடித்துவருகிறார்.

டிசம்பரில் அழைப்பு
மைதான் படத்தில் நடிப்பது பற்றி பிரியாமணி கூறும்போது, இந்தப் படத்தில் நடிக்க எனக்கு டிசம்பர் மாதமே அழைப்பு வந்தது. போனி கபூர் என்னை அழைத்துப் பேசினார். அவரது அலுவலகத்தில் வைத்து இயக்குனர் அமித் கதை சொன்னார். உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

ஷூட்டிங்
நிஜ கேரக்டரில் நடிப்பது எப்போதுமே சிறப்பானது. எனக்கான ஷூட்டிங் இந்த மாத இறுதியில் நடக்கிறது. நடிகர் அஜய்தேவ்கன், இயக்குனர் அமித் ஆகியோருடன் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவாக
தலைவி படத்தில் சசிகலாவாக நடிப்பது பற்றி கேட்டபோது, அது பற்றி இப்போது பேச மாட்டேன். அசுரன் ரீமேக், மைதான் படங்களில் நடிப்பதற்காக என் கால்ஷீட்டை சரி செய்யும் முயற்சியில் என் மானேஜரும் என் கணவரும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications











