»   »  நடிக்க வந்ததும் கூச்சம் எல்லாம் போச்சு: சமந்தா

நடிக்க வந்ததும் கூச்சம் எல்லாம் போச்சு: சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியதும் தனது கூச்ச சுபாவம் மாறிவிட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரை உலகில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த சமந்தா தற்போது தமிழ் படங்களில் நடிக்க முன்னுரிமை கொடுத்து வருகிறார். அதனால் அவர் கையில் தற்போது தெலுங்கு படங்கள் இல்லை. தமிழ் படங்களிலும் சமந்தா படுகவர்ச்சியாக நடிக்கத் துவங்கியுள்ளார்.

சமந்தாவின் ஓவர் கவர்ச்சியால் தான் அவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையேயான காதல் முறிந்தது என்று கூறப்பட்டது.

கூச்சம்

கூச்சம்

சமந்தாவுக்கு நடிக்க வரும் முன்பு ரொம்பவே கூச்ச சுபாவமாம். 4 பேர் சேர்ந்து நின்றால் கூட அந்த இடத்திற்கு செல்ல கூச்சப்படுவாராம். இப்படி அநியாயத்திற்கு கூச்சப்பட்ட சமந்தா படங்களில் நடிக்க வந்தார். நடிகையான பிறகு கூச்சம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டதாம்.

டான்ஸ்

டான்ஸ்

பள்ளி நாட்களில் சமந்தாவை நடனமாடுமாறு அவரது ஆசிரியைகள் வலியுறுத்தினார்களாம். ஆனால் பலர் முன்பு ஆட கூச்சமாக இருந்ததால் அவர் நடனமாடவில்லையாம். ஆனால் அந்த கூச்சம் எல்லாம் தற்போது இல்லை என்கிறார் சமந்தா.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

சமந்தாவுக்கு சினிமாவுக்கு வந்த புதிதில் நடனமாடத் தெரியவில்லையாம். பின்னர் பெரிய ஹீரோக்களிடம் இருந்து நடனம் கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

சமந்தா விக்ரம் ஜோடியாக நடித்த 10 எண்றதுக்குள்ள படம் ரிலீஸாக உள்ளது. சமந்தா வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளார். இது தவிர அவர் மேலும் 2 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

English summary
Samantha told that her shyness has gone after entering cinefield. Samantha is giving preference to Kollywood rather than Tollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil