மூன்று திருமணங்கள்.. அனைத்தும் விவாகரத்து.. எல்லாமே வேஸ்ட்.. பிரபல நடிகை ஓபன் டாக்
சென்னை: மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர் மீரா வாசுதேவன். இவர் இதுவரை மூன்று திருமணங்கள் செய்திருக்கிறார். ஆனால் எந்த திருமண வாழ்க்கையும் அவருக்கு ஒழுங்காக அமையவில்லை. இப்போது முழுமையாக திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்திருக்கும் அவர்; சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் விரக்தியின் உச்சத்தில் இப்படி பேசுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
மும்பையை சேர்ந்த மீரா வாசுதேவன்; ஹிந்தியில் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். தமிழில் அவர் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, அடங்க மறு, ஆட்டநாயகன், குமரி பெண்ணின் உள்ளத்திலே படங்களில் நடித்திருக்கிறார். எதுவும் அவருக்கு கோலிவுட்டில் கைகொடுக்கவில்லை. அதேசமயம் மலையாள திரையுலகத்தில் இன்னமும் அவர் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சனல் வாழ்க்கை: மீராவின் பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை முதலில் விஷால் அகர்வால் என்பவருடன் திருமணம் நடந்தது. ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஜான் கொக்கனை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. இறுதியாக விபின் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். அதுவும் டைவர்ஸ் ஆனது. சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
மீரா வாசுதேவன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "மூன்று முட்டாள்த்தனமான திருமணத்தை செய்துகொண்டேன். அதன் காரணமாக என்னுடைய வாழ்க்கையில் 17 ஆண்டுகள் வீணடித்துவிட்டேன். அதனை எனது மகனிடமும் சொன்னேன். திருமணம் செய்து வாழ்ந்த ஆண்டுகளில் வேறு ஏதாவது பயனுள்ளதாக செய்திருக்கலாம். எனக்கு பிடித்த சினிமாவிலேயே இன்னமும் அதிகமாக உழைத்திருக்கலாம். ஃபிட்னெஸ்ஸில் கவனத்தை திருப்பியிருக்கலாம். பொது சேவைகளை செய்திருக்கலாம்.
என்னை மதிக்காதவர்கள்: இவை தவிர்த்து நிறைய விஷயங்களை செய்திருக்கலாம்தான். ஆனால் நான் செய்யவிலலி. எனது அம்மா அப்பா, சகோதரியுடம் டைம் ஸ்பெண்ட் செய்திருக்கலாம். என்னை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவர்கள், என்னை மதிக்காதவர்களுக்காக நேரத்தை வீணடித்துவிட்டேன். என்னுடைய மூன்றாவது கணவர் மகனை மதிக்கிறார் என்று உணர்ந்தேன். மகனும் சந்தோஷமாக இருந்தார். அவர் கண்டிப்பாக ஒரு நல்ல தகப்பனாக இருப்பார் என்றுதான் நினைத்தேன்.
அப்படியில்லை அவர்: அதேசமயம் அவர் வயதில் ரொம்பவே சிறியவர். இது எனக்கு சரிபட்டு வராதோ என்று ஆரம்பத்திலேயே சந்தேகம் இருந்தது. இருந்தாலும் திருமணம் செய்துகொண்டேன். ஏமாற்றுவது, துரோகம் செய்வதை எல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. எனக்கு டிரஸ்ட் பிரச்னை இருந்தது. என்னை என்னாலேயே கண்ணாடியில் பார்க்க முடியாத நேரம் எல்லாம் இருந்தது. மேலும் எனக்கு சிறு வயதிலேயே பாலியல் தொல்லையும் கொடுக்கப்பட்டது. அதுவும் எனக்கு பெரிய பிரச்னையாக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
