நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால்... மனம் திறந்த அஞ்சலி!

தான் யாரையும் காதலிக்கவில்லை என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

சென்னை: திருமணத்திற்கு பிறகும் தான் தொடர்ந்து நடிப்பேன் என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

கற்றது தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அஞ்சலி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேரன்பு திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை அஞ்சலியின் திருமணம் மற்றும் காதல் குறித்து அவ்வப்போது செய்திகள் உலா வருவது வழக்கம். நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக நீண்ட காலமாக ஒரு செய்தி உலாவுகிறது.

இந்நிலையில், தான் யாரையும் காதலிக்கவில்லை என்று அஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

தவறான செய்திகள்

தவறான செய்திகள்

"என்னை சினிமாவில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நான் காதலிப்பது போலவும், திருமணம் செய்து கொள்வது போலவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

யாரையும் காதலிக்கவில்லை

யாரையும் காதலிக்கவில்லை

நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் நான் காதலிக்கிறேன். நடிகைகள் காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது எல்லாம் சகஜம் தான்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்

என்னை பொறுத்த வரை திருமணம் செய்து கொண்ட பிறகும், நான் நடிப்பை தொடருவேன். எனது சினிமா பயணத்திற்கு திருமணம் ஒரு தடையாக இருக்காது", என அவர் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு...

திருமணத்திற்கு பிறகு...

இன்றைய சூழலில் நடிகைகள் திருமணம் செய்து கொண்டபிறகும் கூட நடித்து வருகின்றனர். இதற்கு சமந்தா ஒரு முக்கிய உதாரணம். அவரை பின்பற்றி நிறைய நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடிப்பதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X