கல்யாணம் முடிந்து விட்டால் அடிமையா... நடிக்கக் கூடாதா?... கேட்கிறார் சாயிஷா ஆர்யா

சென்னை: நான் சின்னப்பொண்ணுதான் என்னோட கனவுகளை கல்யாணம் தடை செய்யாது என்று நடிகை சாயிஷா கூறியுள்ளார். அழகான நடிகை சாயிஷா சில படங்களில் நடித்த போதே ஆர்யா உடன் காதலில் விழுந்து கல்யாணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் நடிக்கிறார். இப்போது அனைவரும் அவரது கல்யாண வாழ்க்கை பற்றியும் சினிமா நடிப்பு பற்றியும் கேட்பது வருத்தத்தை தருகிறதாம். என் திருமணத்தின் போதே நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்த நிலையில் பலரும் இப்படி கேட்பது கோபத்தை தருகிறது என்கிறார்.

நான் வயதில் மிகவும் சிறியவள். திரையுலகில் எவ்வளவோ சாதிக்க விரும்புகிறேன். சமூகத்தில் பெண்களை குறித்து இருக்கும் இந்த மனோபாவம் மாற வேண்டும் என்றும் நடிகை சயீஷா ஆவேசமாக கூறியுள்ளார். திருமணம் முடிந்து விட்டால் அடிமையாக சேவகம் செய்ய வேண்டுமா என்றும் கேட்கிறார் சாயிஷா.

கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிகை சயீஷா ஜோடி சேர்ந்து நடித்தனர். இவர்கள் இருவரின் பொருத்தமும் மிகவும் நன்றாக இருந்ததால் ஆர்யாவின் பெற்றோர் சயீஷாவை பெண் கேட்டுள்ளனர். இவர்கள் இருவர் குடும்பத்தின் சம்மததோடு ஆர்யாவிற்கும் சயீஷாவிற்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

இனிதே தொடங்கியது அவர்களது திருமண வாழ்வு. திருமணத்திற்கு பிறகு சயீஷாவிடம் கேள்வி கேட்கும் அனைவரும் திருமணம் ஆகி விட்டதே, இனிமேல் படங்களில் நடிப்பீர்களா, என்று தான். யார் மைக்கை நீட்டினாலும் இதே கேள்வியை கேட்டு சயீஷாவை கோபத்தில் ஆழ்த்துகின்றனர்.

நான் என்ன அடிமையா

நான் என்ன அடிமையா

ஒரு நடிகை திருமணம் முடிந்தவுடன் தன் கணவருக்காகவும், அவருடைய குடும்பத்தினருக்காகவும் மட்டுமே சேவை செய்து வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டுமா என்ன. அவர்களுக்கு அடிமையாக தான் வாழ வேண்டுமா. தனிப்பட்ட ஆசைகள் கனவுகள் என்று எதுவும் இருக்கக் கூடாதா என்று கேட்கிறார் சயிஷா

கல்யாணம் தடையில்லை

கல்யாணம் தடையில்லை

ஏன் இந்த சமூகம் இப்படி ஒட்டுமொத்தமாக, ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு மொத்தமாக மாறிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று மிகுந்த ஆவேசத்தில் கொந்தளிக்கிறார் சயீஷா. என் திருமணத்தின் போதே நான் திரைப்படங்களில் தொடந்து நடிப்பேன். என் திருமணம் என் கனவிற்கு குறுக்கே தடையாக நிற்காது என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அடுத்தடுத்து அனைவரும் கேட்கும் இந்த கேள்வி வருத்தத்தை அளிக்கிறது.

படப்பிடிப்பில் ஹனிமூன்

படப்பிடிப்பில் ஹனிமூன்

எங்களின் திருமணம் முடிந்த பிறகு இருவரும் இணைந்து டெடி எனும் படத்தில் கமிட்டாகி உள்ளோம். அப்படத்தின் படப்பிடிப்பிற்காக நாங்கள் மேற்கொண்ட பயணத்தையே எங்களது ஹனிமூனாக கொண்டாடினோம்.

காப்பான்

காப்பான்

திருமணத்திற்கு முன்னதாகவே சயீஷா சூர்யாவிற்கு ஜோடியாக காப்பான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால் அதில் நடித்து கொடுத்தார். அப்படத்தில் திடீரென சூர்யாவிற்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் ஆர்யா. கணவன் மனைவி இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நடித்துள்ள இந்த காப்பான் திரைப்படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

கதாநாயகிகள்

கதாநாயகிகள்

அந்த படத்தின் புரமோசனில் பங்குகொண்ட சயீஷாவிடம் கேட்ட கேள்விகளுக்கு தான் சயீஷா இவ்வாறு பதிலளித்துள்ளார். நான் வயதில் மிகவும் சிறியவள். திரையுலகில் எவ்வளவோ சாதிக்க விரும்புகிறேன். சமூகத்தில் பெண்களை குறித்து இருக்கும் இந்த மனோபாவம் மாற வேண்டும் என்றும் கூறியுள்ளார் சாயிஷா. பாலிவுட்டில் பல நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் கதாநாயகிகளாக கலக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X