பேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க.. நான் இப்படித்தான்.. மிரள வைக்கும் ரகுல் பிரீத் சிங்!
Recommended Video
சென்னை: புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றவர்கள் பேசுவது குறித்த கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக நடிகைகள் சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து வருகின்றனர். ஆடை படத்தில் அமலா பால் தம்மு தண்ணி என சுற்றுவது படத்தின் ட்ரெயிலரில் தெரிந்தது.
இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் படத்தில் தம் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ரகுல் பிரீத் சிங் உடை விஷயத்தில் கஞ்சத்தனம் கவர்ச்சியில் தாராளமும் காட்டி வருகிறார்.

புகைப்பிடிக்கும் காட்சி
இதற்கே நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ள ரகுலை நெட்டிசன்கள் திட்டி தீரத்தனர்.

டீஸர் ரிலீஸ்
நாகார்ஜூனா நடித்துள்ள மன்மதடு 2 தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல். இதன் டீஸர் அண்மையில் வெளியானது. அதில் ரகுல் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

பேசுவது மட்டும்தான் வேலை
இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரகுல் பிரீத் சிங் இதுபோல் பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்தான் வேலை.

தடாலடி
மன்மதடு 2 படத்தில் நான் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன். அந்த கதாபாத்திரம் சிகரெட் புகைக்கும் என்பதால் நான் நடித்தேன். கதைப்படி என்ன தேவைப்படுகிறதோ அதை செய்வேன், என்று தடாலடியாக கூறினார் ரகுல்.


Click it and Unblock the Notifications











