நிரம்பி வழியும் தன்ஷிகாவின் கால்ஷீட்
தன்ஷிகாவின் கால்ஷீட் டைரி நிரம்பிக்கிடக்கிறது. 'கிட்ணா', 'விழித்திரு', 'காத்தாடி', 'திறந்திடு சீசேம்', 'மால்' என்று ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். படங்களில் பிஸியாக இருப்பதால் யாரையும் காதலிக்க நேரமில்லையாம். ஆனால் கண்டிப்பாக காதல் திருமணம்தான் என்கிறார் தன்ஷிகா.
மும்பை நாயகிகளும், மலையாள தேசத்து மங்கைகளும் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவில் வரிசையாக படங்கள் செய்து வருகிறார் தஞ்சாவூர் தமிழ் பொண்ணு தன்ஷிகா. ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் பளிச் முகம் காட்டினார். அடுத்து அருண்விஜய் நடித்த 'மாஞ்சா வேலு'வில் ஸ்கோர் செய்தார்.
வசந்தபாலனின் 'அரவான்', பாலாவின் 'பரதேசி' ஆகிய இரு படங்களும் தன்ஷிகாவின் சினிமா கேரியரில் மறக்கமுடியாதவை. அவருடைய ஆண் தன்மையோடு இருக்கும் குரல் தன்ஷிகாவை தனியாக அடையாளம் காட்டும்.
'யா யா' படத்துக்குப் பிறகு கிட்ணா, விழித்திரு, காத்தாடி, திறந்திடு சீஸே, மால் என டாப்கியரில் எகிறியுள்ளது தன்ஷிகாவின் சினிமா பயணம்.

செம குஷியில்
சமுத்திரக்கனியின் கிட்ணா படத்துக்காக 48 வயசு கெட்டப்பில் நடிக்கிறார் தன்ஷிகா. ‘பரதேசி'படத்திற்கு பிறகு சின்ன இடைவெளி ஏற்பட்டாலும் வரிசையாக 5 படங்கள் ரிலீஸ் ஆக காத்திருப்பதால் செம குஷியில் இருக்கிறார் தன்ஷிகா.

நாலுவிதாமான பயணம்
கிட்ணா படத்தில் 18 வயசில இருந்து 48 வயசு வரை நாலு வித காலகட்டங்கள்ல டிராவல் பண்ற கதாபாத்திரமாம்.

திறந்திடு சீஸே
ஷங்கரோட அசிஸ்டென்ட் முத்து இயக்குறார். சஸ்பென்ஸ் த்ரில்லர். படம்தான்‘திறந்திடு சீஸே'படம். குறும்பட போட்டியில் வென்ற கல்யாண் இயக்கும் காத்தாடி படத்திலும் நடிக்கிறார்.

சிலம்ப நாயகி
உடலை ஃபிட்டா வச்சுக்க சிலம்பம் கத்துக்கலாம்னு விளையாட்டாதான் தொடங்கினேன். ஆர்வம் அதிகமாகி, தொடர்ந்து சின்ஸியரா கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். இப்போ நான் நடிக்கிற படங்களுக்கும் அது உபயோகமாக உள்ளது என்கிறார் தன்ஷிகா. ‘கிட்ணா' படத்துக்காக சமுத்திரக்கனியும் சிலம்பம் கற்றுக்கொண்டுள்ளாராம்.

லவ் மேரேஜ்தான்
படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தன்ஷிகா,
நிஜ வாழ்க்கையில் இதுவரை யாரையும் காதலித்ததில்லையாம். ஆனா கண்டிப்பா எனக்கு லவ் மேரேஜ் தான் என்கிறார் தன்ஷிகா.


Click it and Unblock the Notifications











