இதுவல்லவோ கொள்கை.. கிளாமருக்கு ஓகே.. ஆனால், ஆபாச காட்சிகளுக்கு நோ.. பிரபல நடிகை திட்டவட்டம்!
மகாராஷ்ட்ரா: பிரபல மராத்தி நடிகை சோனாலி குல்கர்னி ஆபாச காட்சிகளில் நடிக்க தான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video
மகாராஷ்ட்ராவின் கட்கி மாவட்டத்தை சேர்ந்த சோனாலி குல்கர்னி மராத்தி படங்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
வெப்சீரிஸ்களில் அதிகப்படியான இன்டிமேட் காட்சிகளில் நடிக்க அழைப்பு வருவதாகவும், அதனால், அவற்றை ரிஜெக்ட் செய்து வருவதாகவும் சோனாலி கூறியுள்ளார்.

மராத்தி நடிகை
கடந்த 2006ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான கெளரி படத்தில் லீடு ரோலில் கெளரி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் சோனாலி குல்கர்னி. தொடர்ந்து, 14 ஆண்டுகளாக மராத்தி மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். 2010ம் ஆண்டு வெளியான நடாரங் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

பாலிவுட்டில்
மராத்தி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாலி குல்கர்னி, பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு இந்திர குமார் இயக்கத்தில் வெளியான கிராண்ட் மஸ்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அஜய் தேவ்கன் 2014ம் ஆண்டு வெளியான சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

படு கிளாமராக
கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியான Ti Ani Ti படத்தில் படு கிளாமராக நடித்திருந்தார் சோனாலி குல்கர்னி. அந்த படத்தைத் தொடர்ந்து வெளியான ஹிர்க்கானி படத்திலும் பலரது பாராட்டுக்களை அள்ளிய சோனாலிக்கு, வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்புகள் படையெடுக்க தொடங்கி இருக்கின்றன.

ஆபாசமாக
வெப்சீரிஸ்களில் சென்சார் கட் இல்லாததால், கிளாமரையும் தாண்டிய ஆபாச காட்சிகளிலும், நிர்வாண காட்சிகளிலும், உடல் உறவு கொள்ளும் படியான இன்டிமேட் காட்சிகளிலும் நடிக்கவே தனக்கு அதிகப்படியான அழைப்புகள் வருவது என்றும், ஆனால், எவ்வளவு காசு கொடுத்தாலும் ஒரு போதும் அவ்வாறு தன்னால் நடிக்க முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கண்ணாடி முன்
சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததாகவும், பள்ளி மேடை நாடகங்களில் நடிக்கும் காலங்களில் இருந்தே கண்ணாடி முன் நின்று நடித்து பழகியதாகவும், பாலிவுட் நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித்தை மனதில் நினைத்துக் கொண்டு நடித்து வந்தேன். இப்போதும் அவர்கள் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











