இன்னைக்கு என் நகத்தை நான் கடிக்கவே மாட்டேன்.. திடீர் சபதம் எடுத்த கஜோல்.. என்ன காரணம்?

மும்பை: மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவு நடிகை கஜோலின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மின்சாரக் கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கஜோல்.

நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்ட கஜோல் தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக

பல ஆண்டுகளாக

மின்சாரக் கனவு படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனமாடியது போலவே இப்பவும் அதே அழகுடனும் இளமையுடனும் இருந்து வருகிறார் நடிகை கஜோல். ஏகப்பட்ட பாலிவுட் ஹிட் படங்களில் நடித்து முடித்த அவர் கடந்த ஆண்டு கணவர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான தான்ஹாஜி படத்திலும் நடித்திருந்தார்.

Recommended Video

நான் ஒரு நாள் கூட ஷூட்டிங்கை ரத்து செய்தது இல்லை தெரியுமா: நடிகை பெருமிதம்- வீடியோ
60 கோடிக்கு பங்களா

60 கோடிக்கு பங்களா

சமீபத்தில் தான் நடிகை கஜோல் மற்றும் அவரது கணவர் அஜய் தேவ்கன் இணைந்து 60 கோடி ரூபாய்க்கு மும்பையில் பழைய பங்களா ஒன்றை வாங்கினர். மறைந்த பிரபல பணக்காரர் புஷ்பா வலியாவின் பங்களாவை வாங்கியுள்ள அவர்கள் அதனை சீரமைத்து விரைவில் அந்த வீட்டிற்கு குடிபுக உள்ளனர்.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்

இன்ஸ்டாவில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் எப்போதுமே ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார் நடிகை கஜோல். சுமார் 11.3 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மகன் யுக் உடன் மாஸ்க் அணிந்த படி அவர் வெளியிட்ட புகைப்படம் 2.5 லட்சம் லைக்குகளை அள்ளியது.

நகத்தை கடிக்க மாட்டேன்

நகத்தை கடிக்க மாட்டேன்

மிகவும் சென்சிடிவான நடிகை கஜோல் எந்தவொரு விஷயம் என்றாலும் உடனடியாக தனது நகத்தை கடிக்க ஆரம்பித்து விடுவார். இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவர், அதன் ஸ்க்ரிப்ட் பேப்பர்களை பார்த்த உடன் வாய் வரை விரல் சென்ற நிலையில், எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, இனிமே நகத்தை கடிக்க மாட்டேன் என திடீர் சபதம் எடுத்து வைரலாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X