"அது" என்னோடது.. என் விருப்பம்.. பிடிச்சவங்க கூட ஷேர் பண்ணிக்குவேன்..லைவில் வாய் பிளக்க வைத்த நடிகை!

சென்னை: பேஸ்புக் லைவில் செக்ஸ் குறித்து பேசிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பிடித்தவர்களுடன் படுக்கையை ஷேர் செய்வதில் தனக்கு தயக்கம் இல்லை என கூறியுள்ளார்.

Recommended Video

Rambha Indran Wedding Anniversary | 'No Relatives N Friends' | Lock down diaries

நடிகை ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவை சேர்ந்த பலர் மீதும் குற்றம்சாட்டினார்.

இதனால் ஒட்டு மொத்த திரைத்துறையினரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி வாய்க்கு வந்தப்படி பேசி வருகிறார்.

தன்னைப் பற்றி கமெண்ட்

தன்னைப் பற்றி கமெண்ட்

அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசி வரும் ஸ்ரீரெட்டி செக்ஸ் குறித்தும் பச்சை பச்சையாக பேசி வருகிறார். தான் செய்வது சரி என அடிக்கடி நியாயப்படுத்தும் ஸ்ரீரெட்டி தன்னைப் பற்றி மற்றவர்கள் தரக்குறைவாக கமெண்ட் பண்ணக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளார்.

பியூட்டி பிசினஸ்

பியூட்டி பிசினஸ்

இந்நிலையில் நேற்று இரவு பேஸ் புக் லைவில் தனது ரசிகர்களுடன் பேசினார் ஸ்ரீரெட்டி. அப்போது, அவருக்கு வரும் கமெண்ட்ஸ்கள் குறித்தும், தன்னுடைய உடம்பை எக்ஸ்போஸ் செய்வது குறித்தும் பேசினார். தன்னுடைய யூட்யூப் சேனல், தான் பங்கேற்கும் பேஷன் ஷோ மற்றும் தன்னுடைய படங்களுக்காக தான் பியூட்டி பிசினஸ் செய்வதாக கூறினார்.

படுப்பதில் பிரச்சனை

படுப்பதில் பிரச்சனை

தொடர்ந்து பேசிய ஸ்ரீரெட்டி தான் கிளாமர் போட்டோவை போடுவதால் கேட்பவர்களுக்கெல்லாம் தன்னுடைய உடம்பை காட்ட முடியாது என்றும் நீங்கள் பணம் கொடுக்கிறீர்கள் என்றால் உங்களுடன் படுக்க முடியாது என்றும் கூறினார். தனக்கு யாரை பிடிக்கிறதோ தான் யாரால் இம்பிரஸ் ஆகிறேனோ அவர்களுடன் படுக்கையை ஷேர் செய்வதில் தனக்கு தயக்கம் இல்லை என்று கூறினார்.

செக்ஸ் என்பது ஒருபகுதி

செக்ஸ் என்பது ஒருபகுதி

மேலும் தன்னுடைய உடம்பு, தான் விருப்பப்பட்டவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வேன் என்றும் பச்சையாக கூறினார். தன்னைப் பற்றி யாரும் எந்த ஜட்ஜ்மெண்டும் கொடுக்க வேண்டாம் என்ற ஸ்ரீரெட்டி, செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி அதை விருப்பப்பட்டவருடன் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

என்னை பற்றி தெரியுமா?

என்னை பற்றி தெரியுமா?

இரண்டு மூன்று பேருடன் படுக்கையை பகிர்ந்தால் உடனே விபச்சாரி என்று அழைக்க ஆரம்பித்து விடுவீர்கள். என்னை பிடிக்காதவர்கள் அன்ஃபாலோ செய்துவிடுங்கள். என்னைப் பற்றி பேசாதீர்கள். என்னுடைய பேக்ரவுண்ட் உங்களுக்கு தெரியுமா? நான் யார் என்று தெரியுமா? என் நாலேட்ஜை பற்றி தெரியுமா என்று கேள்விகளையும் கேட்டார்.

எங்களுக்கும் ரைட்ஸ் உள்ளது

எங்களுக்கும் ரைட்ஸ் உள்ளது

மேலும் எனக்கு யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேச உரிமை உள்ளது என்றும் கூறினார். ஸ்ரீரெட்டியின் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சிலர் இப்படி பேசுவதற்கு எதற்கு லைவில் வந்தீர்கள் என்று கேட்டனர். இன்னும் சிலர் உங்களுக்கு உள்ள அதே ரைட்ஸ்தான் எங்களுக்கும் உள்ளது என பதிலடி கொடுத்தனர்.

எல்லோரையும் சொல்லவில்லை

எல்லோரையும் சொல்லவில்லை

பின்னர் நான் எல்லோரையும் சொல்ல வில்லை. என்னைப் பற்றி தவறாக பேசுபவர்களைதான் பேசுகிறேன் என்று கூறினார். சில படங்களில் நடித்து வருவதாகவும் அந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்றும் கூறினார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து பேசிய ஸ்ரீரெட்டி அரசியலையும் விட்டு வைக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X