கவர்ச்சி போட்டோ ரிலீஸ் செய்ய காரணம் என்ன? சொல்கிறார் ரம்யா பாண்டியன்
Recommended Video
சென்னை: நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதையே செய்வேன், கவர்ச்சி தேவை என்றால் அதையும் காட்டுவேன் என்று ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி படம் வெளியிட்டது பற்றி குறிப்பிட்டு பேசினார்.
கடந்த சில தினங்களாக வைரலாகி இருக்கிறார் ஜோக்கர் திரைப்பட கதாநாயகி ரம்யா பாண்டியன். அவர் வைரல் ஆவதற்கு காரணம் அவர் மேக் அப் இல்லாமல் புடவையில் அவர் வெளியிட்ட கிளுகிளு கவர்ச்சி புகைப்படங்கள். படத்தைப் பார்த்த பாதி பேர் ரம்யா பாண்டியனின் இடுப்பை பற்றியும் பேசினார்கள்.
சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே இப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்றும் திரைப்படங்களில் வாய்ப்பு பெறுவதற்காக என்றும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பாக நடிகை ரம்யா பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.

சுய மதிப்பீடு
இந்த ஃபோட்டோ ஷூட் எடுப்பதற்கான முக்கிய காரணம் நானே என்னை சுய மதிப்பீடு செய்து கொள்வதற்காக மட்டுமே. உடல் எடை, தோற்றம் இதில் ஏதாவது மாறுதல் தேவைப்படுகிறதா என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே நான் எடுத்த புகைப்படங்கள் இவை. இதன் மூலம் எனது தன்னம்பிக்கை அதிகமாகிறது.

புடவையில் கவர்ச்சி
புடவை என்பது தினசரி இல்லத்தரசிகள் பயன்படுத்தும் ஒரு உடை. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. அது எப்படி வைரல் ஆனது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது என்றார். மீடியாவில் இருப்பதால் மீடியாவிற்கு தெரியப்படுத்தவே இவற்றை இணையத்தில் வெளியிட்டேன்.

போட்டோ சூட்
இப்போது மட்டுமல்ல, தான் அடிக்கடி சீரான இடைவெளி விட்டு ஃபோட்டோ ஷூட் எடுத்து வருவதாகவும் அதை போஸ்டும் செய்வதாகவும் தெரிவித்திருந்தார். சில போட்டோ ஷூட்கள் வெஸ்டர்ன் உடையில் எடுக்கப்பட்டதால் ஒரு மாறுதலுக்காக புடவையில் இந்த ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்டதாக கூறினார்.

ஒரே இரவில் வைரல்
இயல்பாக இருக்கட்டுமே என்று ஃபோட்டோகிராபர் சுரேந்தரின் ஐடியாவில் தான் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஒரே இரவில் எப்படி இந்த புகைப்படங்கள் இப்படி வைரல் ஆனது என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது என்றார். விமர்சிப்பவர்களுக்கு ரம்யா பாண்டியன் கூறிய பதில், என்னுடைய தரப்பில் இருந்து நான் எடுக்கும் முயற்சியே தவிர இதில் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தமில்லை.

கதைக்கு ஏற்ப கவர்ச்சி
எனக்கு திரைப்பட வாய்ப்பு வந்துகொண்டு தான் இருக்கிறது அதற்காக கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையுமே ஏற்று கொள்ள முடியாது. நல்ல ஒரு கதாபாத்திரத்தை எதிர்பார்ப்பது உண்மை தான். அந்த வகையில் ஒரு கதாபாத்திரத்திற்கு கவர்ச்சி தேவை என்றால் அதில் தவறில்லை. ஜோக்கர் படத்தில் குடும்பப் பாங்கான பெண் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்திருந்தேன். அது போல நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் என்ன தேவையோ அதை நிச்சயம் நான் செய்வேன். வெகு விரைவில் எனது அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார்.


Click it and Unblock the Notifications











