வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் போடுவேன்… லட்சுமி ராமகிருஷ்ணன்
இன்றைய தமிழ் சினிமாவின் அழகான அம்மா... சினிமா இயக்குநர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி... என பன்முகம் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
17 வயதில் திருமணம் முடிந்து மூன்று பெண் குழந்தைகளின் பாசமான அம்மாவாக இருக்கிறார். மூத்த மகளுக்கு டிசம்பரில் திருமணம் என்று சந்தோசமாக போய்க்கொண்டிருந்த போது திருஷ்டி பட்டது போல கிசுகிசு பரவியிருக்கிறது.
'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் பஞ்சாயத்து பண்ணுபவரின் வாழ்க்கையிலே பஞ்சாயத்தா? என்று கேட்பவர்களுக்கு டிவிட்டர், வாரஇதழ்கள் என ஊடகங்கள் மூலம் பதிலடி கொடுக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஒழுக்கம் பற்றி கமெண்ட்
ஆணோ, பெண்ணோ ஒழுக்கம் அவசியம் என்று ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் சொன்னதற்கு நீங்களும் ஒரு நடிகைதானே என்று யூ டியூப்பில் கமெண்ட் போடுகின்றனர். நடிகைகள் என்றால் ஒழுக்கம் கெட்டவர்கள்தான் என்று எந்த ஆதரத்தில் கமெண்ட் அடிக்கின்றனர் என்கிறார் லட்சுமி.

மகளுக்கு திருமணம்
ராமகிருஷ்ணனுடன் 32 வருட திருமண வாழ்க்கையில் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு வேறொரு துணை எதற்கு என்பது இவருடைய கேள்வி.

துக்கம் விசாரிக்கிறாங்க…
நானும், ஜெயப்பிரகாஷும் நாலு படம் சேர்ந்து நடிச்சோம். அந்த நட்பு அடிப்படையில என்னுடைய ஆரோகணம் படத்தில் நடித்தார். அதுவே பலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. வதந்தி பரப்பியபவர்களை நான் டுவிட்டரில் திட்டியதுதான் நான் செய்த தவறு. அதற்குப் போய் துக்கம் விசாரிக்கின்றனர்.

வழக்கு போடப்போறேன்
தன்னைப் பற்றி இல்லாத ஒன்றை கிரியேட் செய்து வதந்தி பரப்பியவர்களை சும்மா விடப்போவதில்லை வழக்கு போடப்போகிறேன் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் ஜெயப்பிரகாஷோ, எங்களைப் பற்றி கிசுகிசு எழுதி என்ன ஆகப்போகிறது? யாராவது ஹீரோ, ஹீரோயின் பத்தி எழுதுங்க என்கிறார்.


Click it and Unblock the Notifications











