“கவர்ச்சியாக நடிப்பதற்கு கடை வைத்து பிழைத்துக்கொள்வேன்””சாய் பல்லவியின் துணிச்சல் யாருக்கு வரும்?

சென்னை: விஜய் டீவியின் ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் சாய் பல்லவி.

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக ரசிகர்களின் மனதை மயக்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி துணிச்சலாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

டான்சர் டூ மலர் டீச்சர்

டான்சர் டூ மலர் டீச்சர்

விஜய் டீவியில் ஒளிபரப்பான 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதில் போட்டியாளராக கலந்துகொண்டு டான்ஸில் தூள் பறத்தியவர்களில் சாய் பல்லவியும் ஒருவர். இவருடன் நடனமாடிய ஷெரிஃப், இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான டான்ஸ் மாஸ்டராக அசத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலமே சாய் பல்லவி 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக அறிமுகமானார்.

ரவுண்டு கட்டிய சாய் பல்லவி

ரவுண்டு கட்டிய சாய் பல்லவி

'பிரேமம்' படத்தின் வெற்றி சாய் பல்லவியை உச்சத்திற்கே கொண்டு சென்றது. அவரது மலர் டீச்சர் கேரக்டர் செய்த மாயங்கள் அப்படி. அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானுடன் 'களி' படத்தில் ஜோடி சேர்ந்தார். அப்படியே தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த சாய் பல்லவி, டான்ஸ் மட்டும் இல்லாமல் அழுத்தமான நடிப்புலும் ஸ்கோர் செய்தார்.

துணிச்சலான பாத்திரங்கள்

துணிச்சலான பாத்திரங்கள்

பொத்தாம் பொதுவாக ஹீரோயினாக மட்டுமே நடித்துவிடாமல், தனது திறமைக்கு சாவல் விடும் கேரக்டர்களை சாய் பல்லவி தேர்ந்தெடுத்து நடித்தார். தெலுங்கில் ஃபிதா, மிடில் கிளாஸ் அப்பாயி, கனம் என சாய் பல்லவி நடித்த படங்களில், அவரது பாத்திரங்கள் எல்லாம் ரசிக்க வைத்தன.

தமிழ் ரசிகர்களின் ரவுடி பேபி

தமிழ் ரசிகர்களின் ரவுடி பேபி

தமிழில் தனுஷுடன் 'மாரி 2' படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்த சாய் பல்லவியின் ஆனந்தி கேரக்டர், ரசிகர்களை ரவுடி பேபியாக மிரட்டியது. இந்தப் படத்தில் தனுஷுடன் சேர்ந்து டான்ஸிலும் அதகளம் செய்திருந்தார் சாய் பல்லவி. அடுத்ததாக'என் ஜி கே' படத்தில் சூர்யாவின் மனைவியாக செம்ம கெத்தான கேரக்டரில் அசால்ட் செய்திருந்தார்.

கார்கியில் கலக்கிய சாய் பல்லவி

கார்கியில் கலக்கிய சாய் பல்லவி

குறைந்த படங்களில் நடித்தாலும் சரியான கதைகளை மட்டுமே தேர்வு செய்த சாய் பல்லவி, 'ஷியாம் சிங்கா ராய்' படத்தில் தாசி கேரக்டரில் ரொம்பவே துணிந்து நடித்திருந்தார். நானியின் நடிப்பில் தெலுங்கில் வெளியான இந்தப் படம், சாய் பல்லவியின் கேரியரில், மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இப்போது அதையும் கடந்து அவர் நடித்த 'கார்கி' படம், வேற லெவலுக்கு சாய் பல்லவியை கொண்டு சென்றுள்ளது.

எதிலும் துணிச்சல்

எதிலும் துணிச்சல்

சமீபத்தில் கூட மதத்தின் பெயரால் ஒரு பிரிவினர் மீது மதரீதியாக தாக்குதல் நடத்துவதை விமர்சித்திருந்தார். அதற்கு பல மிரட்டல்கள் வந்தபோதும், அதிலிருந்து பின்வாங்காமல் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், தற்போது கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசிய சாய் பல்லவி, "ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், அதனால் நடிக்க சான்ஸ் கிடைக்காமல் போனால் நான் படித்த டாக்டர் வேலைக்குப் போய்டுவேன்" எனக் கூறியுள்ளார். "அப்படியும் இல்லையென்றால் எதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்வேன், அல்லது வேலைக்குப் போவேன்" எனக் கூறி, மாஸ் காட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X